வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
விவசாயிகள் போராட்டம் (Farmers Protest)
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த நவம்பர் 26ந் தேதி முதல் உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாது, போராடி வருகின்றனர்.
இந்த போராட்டம் 40 நாட்களைக் கடந்துள்ள நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், விவசாயிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்தை நடத்தி வருகிறது.
முடிவு எட்டப்படவில்லை (No Solution)
அந்த வகையில் கடந்த 30-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் 2 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. எனினும் சட்டங்களை திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 பிரதான கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
7-வது கட்ட பேச்சு (7th Phase Talk)
இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசு பிரதிநிதிகளுடன், சுமார் 41 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று 7ம் கட்ட (7-th round of Talks between farmers and Govt begins) பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எதுவும் எட்டப்படவில்லை என டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து மீ்ண்டும் வரும் 8-ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் படிக்க...
எந்தெந்த பயிர்களுக்கு எப்போது & எவ்வளவு தண்ணீர் தேவை?
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!
பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!
Share your comments