1. விவசாய தகவல்கள்

PM-kisan 11ஆவது தவணை: பெயர் சேர்ப்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
PM Kisan 11th installment: How to add a name?

இந்தியாவின் முதுகெலும்பு என வருணிக்கப்படும் விவசாயத்தின் கதாநாயகனாக விளங்குவது விவசாயிகள். அத்தகைய விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் மத்திய அரசு சிலத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், விவசாயிகளுக்கு நதி உதவி அளிக்கும் பிரத்யேகத் திட்டம் என்றால் அது PM-Kisan திட்டம்தான்.

இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை பிஎம் கிசான் வெப்சைட்டில் பதிவு செய்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான விவசாயிகள் மத்திய மோடி அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான விவசாயிகள் மத்திய மோடி அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரு தவணைக்கு ரூ.2000 வீதம், ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்த நிதியை மேலும் உயர்த்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், 11ஆவது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு பிஎம் கிசான் நிதியுதவி வந்துசேரும் என்று கூறப்பட்டிருந்தது.ஆனால் நிறையப் பேர் இன்னும் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்யாமல் உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்குக் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே பயன்பெறமுடியும் என்ற விதிமுறை ஆரம்பத்தில் இருந்தது. அதன்பிறகு இந்த விதிமுறை தளர்த்தப்பட்டது.
தற்போது, மிகச் சிறிய அளவு நிலம் வைத்திருந்தால்கூட இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறலாம். இத்திட்டத்தின் கீழ் இன்னமும் இணையாமல் இருக்கும் விவசாயிகளுக்கு வாய்ப்பு உள்ளது.அடுத்த தவணை வருவதற்குள் உங்களது பெயரை இணைத்துக்கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

பிஎம் கிசான் http://www.pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்றால் ‘Farmers Corner’ என்ற ஒரு ஆப்சன் இருக்கும். அதில் கிளிக் செய்து ‘New farmer registration’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்போது பிஎம் கிசான் திட்டத்தில் இணைவதற்கான அந்த விண்ணப்பத்தில் உங்களுடைய பெயர், முகவரி, நில இருப்பு, மொபைல் நம்பர், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களைப் பதிவிட்டு 'submit' கொடுக்க வேண்டும். உங்களது பதிவு விவரங்களைத் தெரிந்துகொள்வதற்கு பிஎம் கிசான் வெப்சைட்டில் சென்று ‘Beneficiary Status’ என்பதில் பார்க்கலாம்.

மேலும் படிக்க...

சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!

இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!

English Summary: PM Kisan 11th installment: How to add a name? Published on: 28 February 2022, 07:12 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.