1. விவசாய தகவல்கள்

PM-kisan புதிய அப்டேட்- 2000 ரூபாய் கிடைக்குமா? கிடைக்காதா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
PM-kisan New Update- 2000 rupees available? Not available?

PM-kisan திட்டத்தில், மத்திய அரசிடம் இருந்து, விவசாயிகள் 2000 ரூபாய் நிதியுதவி பெறுவதற்கான கட்டாய விதிமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அடுத்தத் தொகை வருவதில் சிக்கல் ஏற்படலாம் எனத் தெரிகிறது.

PM-Kisan

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, மத்திய அரசு சார்பில் 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை விவசாயிகளுக்கு முதல் தவணை கிடைக்கும்.
அந்த வகையில், இந்த நிதியாண்டிற்கான முதல் தவணைத் தொகையை,
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பெற
சுமார் 12 கோடி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பணம் கிடைக்கும் என்றுத் தெரிவிக்கப்பட்ட நிலையில், பணம் இன்னும் வந்துசேரவில்லை. இந்த திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் பலர் உள்ளனர். அவர்கள் இந்த நிதியுதவியைப் பெறுவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

கெடு நீட்டிப்பு

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி பெறுவதற்கு மத்திய அரசு இ-கேஒய்சி விதிமுறையைக் கட்டாயமாக்கியுள்ளது. e-KYCக்கான கடைசித் தேதி 2022ம் ஆண்டு  மார்ச் 31ஆம் தேதிதான். ஆனால் விவசாயிகளின் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு இந்த அவகாசம் 2022ம் ஆண்டு மே 31 வரையில் நீட்டிக்கப்பட்டது.

ஆனால் பிரச்சனை என்னவென்றால், தற்போது e-KYC ஆப்சன் கிசான் போர்ட்டலில் தெரியவில்லை. இந்தக் குளறுபடி காரணமாக, இந்த முறையை மத்திய அரசு சில நாட்களுக்கு ஒத்திவைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இத்தகைய சூழ்நிலையில், e-KYC முடிக்காத விவசாயிகளுக்கு அடுத்த தவணை கிடைக்குமா, கிடைக்காதா என்பது ஆயிரம் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.

செய்ய வேண்டியது என்ன?

இப்போது, கிசான் போர்ட்டலில் e-KYC ஆப்சன் தெரியவில்லை என்ற சூழ்நிலையில், பயனாளிகள் என்ன செய்வது வேண்டும் என்பது புதிதாக உள்ளது. இருப்பினும், உங்களுக்கு 2 விருப்பங்கள் உள்ளன. ஒன்று, அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்குச் சென்று உங்கள் இ-கேஒய்சி வேலையை முடிப்பது. இதில் அதிக சிரமம் இருக்கலாம்.

மற்றொரு விருப்பம் என்னவென்றால், காத்திருப்பது. உண்மையில், கடந்த முறை KYC இல்லாமல் விவசாயிகளின் கணக்கில் அரசாங்கம் தவணைப் பணத்தை அனுப்பியது போல, இந்த முறையும் அனுப்ப வாய்ப்புள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே காத்திருப்பதே நல்லது.

மேலும் படிக்க...

ருசிக்க முயன்ற அசைவப் பிரியர் - வாயைப் பிளந்து காட்டிய மீன்!

கோடை வெப்பத்தைத் தகிக்க வைக்கும் தயிர்- எந்த நேரத்தில் சாப்பிடலாம்?

English Summary: PM-kisan New Update- 2000 rupees available? Not available? Published on: 06 April 2022, 10:59 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.