1. விவசாய தகவல்கள்

PM Kisan ரூ.2000 நாளை வெளியீடு|40% காய்கறி மானியம்|வேளாண் பட்ஜெட்|புவிசார் குறியீடு|திருப்பதி லட்டு

Poonguzhali R
Poonguzhali R

PM Kisan 13வது தவணை ரூ.2000-ஐ நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி, காய்கறிகள் பயிரிட விவசாயிகளுக்கு 40% மானியம் அறிவிப்பு, வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க புதுக்கோட்டை விவசாயிகள் கோரிக்கை, தமிழக வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் தங்கல் கருத்துக்களைத் தெரிவிக்கலாம், வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு, திருப்பதி லட்டு இனி பனை ஓலைப் பெட்டியில் விநியோகம்: தேவஸ்தானம் அறிவிப்பு முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

1. PM Kisan 13வது தவணை ரூ.2000-ஐ நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

 
PM Kisan 13வது தவணை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வெளியிட இருப்பதாக அதிகாரப் பூர்வ தகவல் அரசின் தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது. பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் அடுத்த தவணையைப் பிரதமர் மோடி நாளை வெளியிடுகிறார் என அரசு அறிவித்துள்ளது.  அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 அன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் நிகழ்வின் போது, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 8 கோடி பயனாளிகளுக்கு நிதியை வழங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.
 

2. காய்கறிகள் பயிரிட விவசாயிகளுக்கு 40% மானியம் அறிவிப்பு!

 
தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பட விரும்ப அவர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்போது காய்கறிகள், பழங்கள் மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு 40% மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற விரும்பும் விவசாயிகள் சொந்தமாக நிலம் வைத்திருக்க வேண்டும் அல்லது 10 ஆண்டு காலத்திற்கு நிலத்தைக் குத்தகைக்குப் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 

3. வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க புதுக்கோட்டை விவசாயிகள் கோரிக்கை!

 
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பெரும் அளவில் மல்லி, முல்லை போன்ற வாசனை மலர்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆலங்குடி பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

4. தமிழக வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் தங்கல் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்!

 
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வு குறித்து தங்களின் கருத்துக்கள், அறிவுரைகளை தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டிய வழிகளில் முதல் வழி உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம். கடிதம் மூலம் தெரிவிக்க முகவரி,
வேளாண்மை (ம) உழவர் நலத்துறை,
தலைமைச் செயலகம்,
புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை – 600 009.
 

5. வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு!

 
வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. புவிசார் குறியீடினைப் பெற்ற பொருளை, வேறு யாரும் வியாபார நோக்கத்துக்காகவோ, போலியாகவோ பயன்படுத்துவதைச் சட்டப்பூர்வமாக தடுக்க இயலும். தமிழகத்தில் ஏற்கெனவே காஞ்சீபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, மதுரை மல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என 43 பொருட்கள் அல்லது தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் புகழ்பெற்ற வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 

6. திருப்பதி லட்டு இனி பனை ஓலைப் பெட்டியில் விநியோகம்: தேவஸ்தானம் அறிவிப்பு!

 
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். அதேசமயம் லட்டு பிரசாதம் வழங்க பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஓலை பெட்டிகள் மூலம் லட்டு பிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மூன்று விதமான அளவுகளில் ஓலை பெட்டிகள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இவற்றுக்கு 10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் என மூன்று விதமான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
 

7. PM Kisan ரூ.2000 வேண்டாம் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: அரசு வெளியீடு!

 
பிரதம மந்திரி – கிசான் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகள், தங்களுக்கு நிதி உதவி தேவையில்லை என்று தெரிவிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் தகுதியான பயனாளிகள், தங்களுக்கு பிம் கிசான் தவணை நிதி வேண்டாம் என்று தாங்களாக முன்வந்து கூறும் வாய்ப்பை மத்திய வேளாண் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்ட நடைமுறைகளின்படி, "தற்போது இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகள் மட்டுமே நிதி வேண்டாம் என்ற வாய்ப்பை தேர்ந்தெடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது. அதன்படி பி.எம்.கிசான் வலைதளத்தில், surrender PM Kisan benefit என்ற புதிய பகுதியில் இதைச் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியில் பெறப்படும் நான்கு இலக்க OTP எண்ணை சமர்ப்பிப்பது மூலம் உங்களுக்கான நிதி உதவியை ஒப்படைக்கலாம். நித உதவியை ஒப்படைத்த விண்ணப்பதாரர்களுக்கு, " வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டீர்கள். இந்த தேசம் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறது" என்ற குறுந்தகவல் திரையில் தோன்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. ட்ரோன் மூலம் பென்சன் டெலிவரி செய்த அரசு குவியும் பாராட்டு

 
ஒடிசாவில் உள்ள ஒரு தொலைதூரக் கிராமத்தில் உள்ள ஊனமுற்ற பயனாளிக்கு ஓய்வூதியத்தை விநியோகிக்க ஒரு ட்ரோன் பயன்படுத்தப்பட்டது மற்றும் இந்த புதுமையான நடவடிக்கை பரவலாக பாராட்டப்பட்டது. ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஹெட்ராம் சட்னாமி, ஒவ்வொரு மாதமும் தனது அரசாங்க ஓய்வூதியத்தைப் பெறுகிறார். அடர்ந்த காடு வழியாக 2 கி.மீ. நடக்க வேண்டியிருந்தது. இந்த சிரமத்தை புரிந்துக்கொண்ட அரசு அவருக்கு உதவும் விதமாக, பாலேஷ்வர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூதகபாடா கிராமத்தில் உள்ள சட்னாமிக்கு ட்ரோன் மூலம் அவரது வீட்டிற்கே பணம் டெலிவரி செய்யப்பட்டது.
 

9. ரேஷன் கடையில் அறிமுகமாகும் செறிவூட்டப்பட்ட அரிசி!

 
நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவது என மத்திய அரசின் திட்டமிட்டுள்ளது. இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 சேர்க்கப்பட்டதுதான் செறிவூட்டப்பட்ட அரிசியாகும். அங்கன்வாடி மையங்களிலும் சத்துணவு திட்டத்திலும் அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது. அடுத்ததாக ரேசன் கடைகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

10. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகளுக்கு எச்சரிக்கை!

 
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 992 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்  103.68 அடியில் இருந்து 103.66அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 841கன அடியிலிருந்து   வினாடிக்கு 992கனாடியாக அதிகரித்துள்ளது.  அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.66 டி.எம்.சியாக உள்ளது. எனவே, விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
English Summary: PM Kisan Rs 2000 Released Tomorrow|40% Vegetable Subsidy|Agriculture Budget|Geo Code|Tirupathi Lattu Published on: 26 February 2023, 05:58 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.