பிஎம் கிசான் திட்டத்தில் புதிய விதி வந்துள்ளது. இதைக் கடைபிடிக்காவிட்டால் உங்களுக்குப் பணம் கிடைக்காது. ஏற்கனவேப் பெற்றத் தொகையையும் திருப்பிக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். நீங்களும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தில் பயன் பெறுபவராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானதாகும்.
8 மாற்றங்கள்
இந்தத் திட்டத்தில் மத்திய அரசு இதுவரை 8 மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த மாற்றங்களின் அடிப்படையில், உங்கள் ஆவணங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் உங்களுக்குப் பணம் கிடைக்காது.
விதிமுறைப்படி, நீங்கள் தகுதியற்ற விவசாயியாக இருந்தால், நீங்கள் பெற்ற தவணைப் பணத்தையும் உடனடியாகத் திருப்பித் தர வேண்டும். இல்லையேல் அரசு உங்களிடமிருந்து அதைத் திரும்பப்பெறும்.
மோசடிகளைத் தடுக்க
உண்மையில், பிஎம் கிசான் திட்டத்தில் மோசடிகளைத் தடுக்க மத்திய அரசு தீவிரக் கண்காணிப்பை உருவாக்கியுள்ளது.இதன்படி, உங்கள் ஆவணங்கள் புதுப்பிக்கப்படாவிட்டால், தவறான முறையில் பணம் செலுத்துபவர்களின் போலி பட்டியலில் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள். மேலும் இதுவரை பெறப்பட்ட அனைத்து தவணைகளையும் நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.
அரசு நிர்ணயித்த அளவுகோல்களுக்கு நீங்கள் தகுதி பெறவில்லை என்றால், உடனடியாக அனைத்து தவணைகளையும் திரும்பக் கொடுக்க வேண்டும். ஏனெனில் இத்திட்டத்தில் தகுதியில்லாத நிறையப் பேர் மோசடி செய்து பணம் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12வது தவணை
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 11 தவணை பணம் விவசாயிகளின் கணக்கில் வந்துள்ளது. 12வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஆனால் இப்போது அரசின் இந்த திட்டத்தின் கீழ் தகுதியற்ற பல விவசாயிகளும் பயன்பெறுகின்றனர்.
e-KYC கட்டாயம்
இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர, தகுதியற்றவர்களை அடையாளம் காணும் வகையில், இந்த திட்டத்தின் விதிகளை அரசு மாற்றியுள்ளது. சமீபத்தில்தான் பயனாளிகள் e-KYC செய்வது கட்டாயமாக்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், வரி செலுத்துபவர்களும் பயன்பெற்றுள்ளனர். விதிமுறைப்படி இது தவறாகும். அதேபோல, கணவன்-மனைவி இருவரும் பயன்பெற்றுள்ளனர். இதுபோல, விதிமுறைகளை மீறி நிறையப் பேர் நிதியுதவி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இணையதளம்
எனவே நீங்களும் அத்தகைய தவறைச் செய்திருந்தால், தவறாகப் பெற்ற தொகையை நீங்கள் தானாக முன்வந்து திருப்பித் தர வேண்டும். இதற்காக, பிஎம் கிசான் இணையதளத்திலேயே மத்திய அரசு ஒரு வசதியை வழங்கியுள்ளது. அதில் சென்று பார்க்கலாம்.
மேலும் படிக்க...
Share your comments