விவசாயிகளுக்கு நற்செய்தி! அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, வரவிருக்கும் பட்ஜெட்டில் பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையை ஆண்டுக்கு ரூ.6000-லிருந்து ரூ.8000 ஆக, ஒன்றிய அரசு உயர்த்த வாய்ப்புள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 3 விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது குறித்தும், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்த தகவல்களும் இதில் இடம் பெறும். 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பலனளிக்கும் பல கொள்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடான 65,000 கோடி ரூபாயில் இருந்து அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்த குழுவை அமைப்பது குறித்தும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கலாம். விவசாயச் சட்டங்களை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி, MSPக்கான ஒரு குழுவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் அறிவிப்பு அதிக நம்பகத்தன்மையை கொடுக்கும். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இதுபோன்ற அறிவிப்புகள் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை இலக்காகக் கொண்டவை அல்ல என்பதால் தேர்தல் நடத்தை விதிகளை மீறாது.
2022-23 ஆண்டுக்கான கடன் இலக்கு (Credit Target for FY2022-23)
பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கை சுமார் 18 லட்சம் கோடி ரூபாயாக மோடி அரசு உயர்த்த வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு கடன் இலக்கு ரூ. 16.5 லட்சம் கோடி.
வங்கித் துறைக்கான பயிர்க் கடன் இலக்குகளை உள்ளடக்கிய வருடாந்திர விவசாயக் கடனை மையம் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டுக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட விவசாயக் கடன் ஓட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 7% என்ற விகிதத்தில் 3 லட்சம் ரூபாய் வரை குறுகிய காலக் கடன்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசு 2% வட்டி மானியத்தை வழங்குகிறது. உரிய தேதிக்குள் கடனை விரைவாக திருப்பிச் செலுத்த விவசாயிகளுக்கு 3% கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, இது நடைமுறை வட்டி விகிதம் 4% ஆகும்.
மோடி அரசு வட்டி மானியத்தை அதிகரிக்கலாம் மற்றும் கடன்களை சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதிசெய்ய கூடுதல் ஊக்கத்தொகைகளையும் அதிகரிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
தபால் அலுவலக சிறு சேமிப்புக் கணக்கை எவ்வாறு திறப்பது? தேவையானவை
Share your comments