1.PM Kisan 13வது தவணைக்கு ரேஷன் கார்டு நகல் கட்டாயம்
பிரதமர் கிசான் யோஜனாவின் வரவிருக்கும் தவணையைப் பெற விவசாயிகள் e-kyc பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய, ரேஷன் கார்டு நகலை மட்டுமே வழங்க வேண்டும். ரேஷன் கார்டின் சாஃப்ட் காப்பியின் பிடிஎஃப் மட்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதைச் செய்ய, நீங்கள் PM Kisan Yojana இணையதளத்தைப் பார்க்க வேண்டும். நீங்கள் உங்கள் ரேஷன் கார்டின் Soft Copy எனப்படும் நகலை அங்கு சமர்ப்பிக்க வேண்டும். ரேஷன் கார்டு நகல் வழங்கப்படாவிட்டால், இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய முடியாது என்பது குறிப்பிடதக்கது.
2.நிரந்தர கல் பந்தல் அமைக்க 50% மானியம்
நிரந்தர கல் பந்தல் அமைக்க மானியம் என தோட்டக்கலை - மலைப்பயிர்தள் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பந்தல் காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளிக்கு எக்டருக்கு 50 சதவீத மானியமாக ரூ.2 இலட்சம். தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற இன்றே https://www.tnhorticulture.tn/gov.in/tnhortnet/index.php என்ற இணையதளத்தில் பதிவு செய்வீர் என தோட்டக்கலை துறை அறிவுறுத்தப்படுகிறது.
3.விவசாயப் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடியவை Startup-களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் நிதியுதவி
விவசாயம் மற்றும் உணவுத் துறைகளில் விவசாயிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஆக்கப்பூர்வமான தொழில்நுட்ப தீர்வுகளை அடையாளம் காண தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (StartupTN) வியாழக்கிழமை தமிழ்நாடு அக்ரி ஹேக்கத்தான் 2022ஐ அறிமுகப்படுத்தியது. ஹேக்கத்தான், முன்னரே தீர்மானிக்கப்பட்ட விவசாயப் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய ஸ்டார்ட்அப்களைக் கண்டறிந்து வெகுமதி அளிக்கும், மேலும் வணிக ரீதியாக சாத்தியமான யோசனைகளைக் கொண்ட அத்தகைய ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் நிதியுதவி அளிக்கப்படும்.
4.அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைத்தல்
மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அரசு மாணவியர் விடுதிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தோட்டம் அமைத்து தரப்படும். பாதுகாப்பு வேலி தண்ணீர் வசதி மற்றும் குறைந்தபட்சம் 5 சென்ட் இடம் அவசியம், தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலம் பழச்செடிகள், வீரிய காய்கறி இரகங்கள், மூலிகை மற்றும் பிற செடிகள், கருவிகள் மற்றும் உபகரணங்கள் முதலிய இடுப்பொருட்கள் வழங்கப்படும். மேலும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் இரண்டு ஆண்டுகள் வரை வழங்கப்படும்.
5.தற்காலிக மூங்கில் பந்தல் அமைக்க 50% மானியம்
தக்காளி, அவரை மற்றும் கொடி வகைகள் பயிரிடும் விவசாயிகள். உடனே குறைந்த செலவில் மூங்கில் பந்தல் அமைக்க அரசு மானியம் பெறுங்கள். தக்காளி, அவரை மற்றும் இதர வகை கொடி வகைகளில் தற்காலிக மூங்கில் பந்தல் அமைக்க 50 சதவீத மானியமாக ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது. இணைதள பதிவு அவசியம். இன்றே https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/index.php என்ற இணையதளத்தில் பதிவு செய்வீர்!!!
6. FTJ - Farmer The Journalist நிகழ்ச்சி நிரல் தமிழில் ஏற்பாடு
விவசாயிகளுக்காக பிரேத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ப்ரோக்ராம், இதுவாகும். விவசாயிகள் பத்திரிக்கையாளர்களா குரல் கொடுக்க, இது ஒரு முக்கிய தளமாகும். எனவே, கிரிஷி ஜாக்ரன் விவசாயிகள், பத்திக்கையாளர் ஆவதற்கு வழி வகை செய்துள்ளது. இதன் முதல் பேட்சிற்கு நேற்று காலை 11 மணியளவில் பயிற்சி அளிக்கப்பட்டது. இது விவசாயிகளின் பிரச்சனைகளாகட்டும் அல்லது அவர்களின் சாதனைகளாகட்டும் கள நிலவரத்தில் அறிந்து வெளிகொண்டுவர நல்ல தளமாக அமையும்.
7. நோயிடா அமிட்டி பல்கலைக்கழகத்தில் இண்டஸ்ட்ரி-அக்காடமியா சந்திப்பு
நோயிடா அமிட்டி பல்கலைக்கழகத்தில் இண்டஸ்ட்ரி-அக்காதமியா சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. விவசாய தொழில் துறை நிபுணர்களுடன் கலந்துரையாடல், இது மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதால் பல்கலைக்கழக விவசாய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிஷி ஜாகரன் நிறுவனரும் தலைமை ஆசிரியரும் ஆன எம்.சி டொமினிக் தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் தானுக அக்ரிடெக் லிமிடெட் அட்வைசர் கமல் குமார், இஃப்கோ ஹெட் மொரூப் நாம்கெயில் போன்ற பல பிரமுகர்களின் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.
8.வானிலை தகவல்
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நாளை கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
நாளை இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
சம்பா பயிரை காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!
2022-23: கல்வி உதவித்தொகை ரூ.2லட்சம் வரை அரசு அறிவிப்பு! Apply Today
Share your comments