பிரதமரின் கிஸான் மன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகள் 60 வயதை அடையும் போது அவர்களுக்கான ஓய்வு ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 வழங்கப்படுகிறது. சிறு விவசாயிகளின் முதியோர் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக இந்த திட்டம் அமைந்துள்ளது.
PM-KMY திட்டம் என்றால் என்ன? (What is the PM-KMY Plan?)
பிரதமரின் கிஸான் மன் தன் யோஜனா (Pradhan Mantri Kisan Maandhan Yojana) என்ற திட்டம் நாட்டில் உள்ள விவசாயிகளின் சமூக பாதுகாப்பிற்காகவும், விவசாயிகளின் முதியோர் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாகவும் கடந்த 2019 ஆண்டு தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் 1,2019 நிலவரப்படி மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் நிலப்பதிவுகளில் பெயர் இருக்கும் விவாசயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள்.
இந்த திட்டத்தில் இவர்கள் பயன் பெற முடியாது (They will not be able to benefit from this program)
தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme ), மாநில காப்பீட்டுக் கழகம் (Employees State Insurance Corporation Scheme) பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana), பிரதான் மந்திரி வியாபரி மந்தன் யோஜனா (Pradhan Mantri Vyapari Maandhan Yojana) ஆகிய திட்டங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் PM-KMY திட்டத்துக்கு தகுதியற்றவர்களாகிறார்கள்.
PM-KMY திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிப்பது (How to apply under PM-KMY scheme)
முதலில், பொதுவான சேவை மையம் அதாவது e-சேவை மையம் அணுகவும். இந்த சேவை மைத்தின் நோக்கம், நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு B2C சேவைகளைத் தவிர அத்தியாவசிய பொது பயன்பாட்டு சேவைகள், சமூக நலத் திட்டங்கள், சுகாதாரம், நிதி, கல்வி மற்றும் விவசாய சேவைகளை வழங்குவதற்கான அணுகல் புள்ளிகளாகும். இந்த அரசு திட்டங்கள் கீழ் வரும், அனைத்து விதமான சேவைகளுக்கும் இந்த சேவை மைத்தின் உதவியை பெற்றுக்கொள்ளலாம்.
இங்கு சென்று, PM-KMY திட்டத்தின் கீழ் பதிவு செய்ய, உங்கள் ஆதார் அட்டையின் எண் மற்றும் உங்கள் வங்கி கணக்கின் விவரமும் தெரிவிக்க வேண்டும். தேவைப்படுமானால், நகல் ஒன்றை சமர்பிக்கவும்.
PM-KMY -திட்டத்தின் பயன்கள் (Benefits of PM-KMY -Project)
ஒரு குடும்பத்தில் உள்ள கணவனும், மனைவியும் தனித்தனியாக விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
பயனாளர் மாதம் தோறும் குறைந்தபட்சம் ரூபாய் 3,000/- என்றும் வருடத்திற்கு 36,000 வீதம் உதவியாக தனது வயதான காலத்தில் பெறலாம்.
இந்த திட்டத்தில் இணைந்த விவாசயிகள் ஓய்வூதிய திட்டம் முடியும் முன்பே இறந்தால் , அவருடைய மனைவி திட்டத்தை தொடரலாம். அவருக்கு விருப்பம் இல்லையெனில் கணவர் கட்டிய தொகையுடன் வட்டியும் சேர்த்து மனைவிக்கோ அல்லது அவர்களது பிள்ளைகளுக்கு தரப்படும்.
ஓய்வூதியம் பெற்று கொண்டிருக்கும் விவசாயி இறந்தால் அவரது மனைவிக்கு 50% அதாவது ரூ 1500/- வழங்கப்படும்.
கணவனோ, மனைவியோ உயிருடன் இல்லையெனில் அவரது பணம் ஓய்வூதிய நிதியில் வரவு வைக்கப்படும்.
மேலும் படிக்க:
சர்க்கரை உற்பத்தியின் மற்றொரு வழி: ஏழு ஆண்டுகளுக்கு அறுவடை செய்யலாம்
Share your comments