1. விவசாய தகவல்கள்

PMKSY: சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 % மானியம்- கோவை விவசாயிகளுக்கு அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
100% subsidy to set up drip irrigation
Credit : Shuterstock

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டாரத்தில், 2020-21ம் நிதியாண்டில், 1,296 ஏக்கரில் தோட்டப்பயிர்கள் பயிரிடுவதற்கு, சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.3.29 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சொட்டுநீர் பாசனம் (Drip irrigation)

விவசாயத்தை மேம்படுத்தவும், குறைந்த தண்ணீரில் வேளாண்மை செய்யவும், சொட்டு நீர் பாசனம் அமைக்க ஊக்கப்படுத்தப்படுகிறது. சிறு குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்தால், 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே சொட்டு நீர் பாசனம் அமைத்து, ஏழு ஆண்டுகள் கடந்திருந்தால், உபகரணங்கள் மாற்றிக் கொள்ள, மீண்டும் மானியம் வழங்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள்,

  • சிட்டா, அடங்கல்

  • நில வரைபடம்

  • ஆதார் அட்டை நகல்

  • ரேஷன் கார்டு நகல்

  •  2 புகைப்படம்

ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுசிந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, 90952 46221, 97892 62163, 80723 99817 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Credit: Shutterstock

பெரியநாயக்கன் பாளையம்

இதேபோல், பெரியநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலை துறையினர், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் சார்பில், பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்து உள்ளனர்.

பழம், காய்கறி விற்கும் தள்ளுவண்டி, பேக் ஹவுஸ் எனப்படும் காய்கறி தரம் பிரிக்கும் அறை, நிரந்தர மண்புழு கூடம், பிளாஸ்டிக் மூடாக்கு, கோகோ சாகுபடி, நீர்தேக்கும் குட்டை, மிளகாய் பயிர், மலர், சம்பங்கி, பப்பாளி, திசு வாழை, ஒட்டு காய்கறி, முருங்கை காய்கறி சாகுபடி, இயற்கை முறையில் சாகுபடி, தேனீப் பெட்டிகள் அமைக்க பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன.

இது தவிர, தோட்டக்கலைப் பயிர்களில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, மானியங்கள் வழங்கப்படுகின்றன. மானியங்களைப் பெற, போட்டோ, ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நிலவரைபடம், சிறு, குறு விவசாயி சான்று ஆகியவற்றுடன் உடனடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இத்தகவலை, பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவகுமாரன், தோட்டக்கலை அலுவலர் நவநீதா, உதவி தோட்டக்கலை அலுவலர் சக்திவேல் ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க...

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஹெக்டேருக்கு ரூ.4ஆயிரம்- வேளாண்துறை அறிவிப்பு!

செடியில் புழுத்தாக்குதலைக் புரட்டிப்போடும் இஞ்சி-பூண்டு- மிளகாய்க் கரைசல்!

English Summary: PMKSY: 100% subsidy to set up drip irrigation - Call for Coimbatore farmers! Published on: 14 September 2020, 10:46 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.