தேயிலை வாரியம் சார்பில் இந்த மாதத்திற்கான பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.19.85 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் பிரபலம் (Worldwide popularity)
உதகை தேயிலை உலகம் முழுவதும் பிரபலம். இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியில், உதகைத் தேயிலையின் பங்கு மிக அதிகம். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திலும் உதகைத் தேயிலை இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில் உதகையில் விளைவிக்கப்படும் பசுந்தேயிலைக்கு மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இந்தியத் தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஏலம் மூலம் விற்பனை (Sold by auction)
நீலகிரி மாவட்டத்தில், சிறு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள். ஏல மையங்களில் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்தபட்ச விலை (Minimum price)
இதன் விலையை அடிப்படையாக வைத்து பசுந்தேயிலைக்குக் குறைந்தபட்ச விலை, கடந்த, 2015ம் ஆண்டில் இருந்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
விலை நிர்ணயம் (Pricing)
கடந்த மார்ச் மாத ஏல அடிப்படையில், இந்த மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு, கொள்முதல் விலையாகக் கிலோவுக்கு ரூ.19.85 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எச்சரிக்கை (Warning)
அதேநேரத்தில் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச விலை வழங்காமல் தட்டிக்கழிக்கும், தொழிற்சாலைகளைக், கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!
Share your comments