இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி, இன்று வெளியிட்ட அறிவிப்பில், வேளாண் தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.
பரிசு (Reward)
இயற்கை வேளாண்மை, வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மொத்தமாக ரூ.2 லட்சம் அளிக்கப்படும். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயி, முதலில் செல்லிடப்பேசியில் உழவன் செயலி மூலமாகப் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப் போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம்.
வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொண்டு உரிய விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நுழைவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பின்னா் கட்டணம் செலுத்திய ரசீதுடன் விண்ணப்பப் படிவத்தை இணைத்து அளிக்க வேண்டும்.
இயற்கை வேளாண்மை (Organic Farming)
தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்பட்டு பின்னா் மாநிலக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். அதன்பின்பு விண்ணப்பங்கள் மாநிலக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூா் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியையும், புதிய வேளாண் இயந்திர கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியையும் தோ்வு செய்து தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசு அளிக்கும்.
இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம், மூன்றாம் பரிசாக முறையே ரூ.60 ஆயிரம், ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிக்கு பரிசாக ரூ.2 லட்சம் அளிக்கப்பட உள்ளது.
விண்ணப்பத்துக்கான கால அவகாசம் மாா்ச் 18 ஆகும். தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா், துணை இயக்குநா் உள்ளிட்டோரைத் தொடா்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க
சினைப் பிரச்சனைக்குத் தீர்வு: காங்கேயம் இன மாடுகளுக்கு ஹார்மோன் சிகிச்சை திட்டம்!
தென்னை நார் தொழிலை மேம்படுத்த ரிசர்வ் வங்கிக்கு மனு அளிப்பு!
Share your comments