1. விவசாய தகவல்கள்

Profitable Business Idea: வெறும் 75000/- முதலீட்டில்.. 25 ஆண்டுககு வீட்டில் இருத்தே நல்ல வருமானம் பெறலாம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

நீங்கள் ஒரு தனி இடத்தை ஏற்பாடு செய்யாமல் வீட்டில் இருந்துக்கொண்டே ஒரு தொழிலை தொடங்க நினைத்தால், இந்த தகவங் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனலை நிறுவி 25 ஆண்டுகள் வரை வருமானம் பெற முடியும்.

மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் வீட்டின் மீது அமைக்கப்படும் சோலார் பேனல் ஆலைகளுக்கு 30 சதவீத மானியத்தை வழங்குகிறது. மானியமின்றி சோலார் பேனல்களை நிறுவ சுமார் 1 லட்சம் ரூபாய் செலவாகும். இதன் மூலம் ஒரு பெரிய மின்சார தேவையை நீங்கள் பூர்த்தி செய்ய முடியும். உண்மையில், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சோலார் பேனலை (Solar Panel) நிறுவலாம். இதன் மூலம் நல்ல நீண்டகால வருமனாத்தை நாம் பெற முடியும்.

சோலார் பேனல் அமைக்க ஆகும் செலவு?

சோலார் பேனலின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இதன் செலவு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப வேறுபட்டது. ஆனால் அரசாங்கத்தின் மானியத்திற்குப் பிறகு, ஒரு கிலோவாட் மின் தயாரிப்புக்கான சோலார் ஆலை 60 முதல் 70 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்படும். சில மாநிலங்கள் இதற்கு கூடுதல் மானியத்தை வழங்குகின்றன

வீட்டில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதாக இருந்தால் இதற்காக நீங்கள் எந்த வங்கியிலும் வீட்டுக் கடனை எடுக்கலாம். அனைத்து வங்கிகளுக்கும் வீட்டுக் கடன்களை வழங்குமாறு நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?

  • வீட்டில் நிறுவப்படும் சோலார் பேனல்களை 25 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.

  • வீட்டின் மேற்கூரையில் இந்த பேனலை எளிதாக நிறுவலாம். இதன் மூலம் இலவச மின்சாரத்தை நீங்கள் பெற முடியும்.

     

  • மீதமுள்ள மின்சாரத்தை கிரிட் மூலம் அரசாங்கத்துக்கோ அல்லது நிறுவனத்துக்கோ விற்க முடியும்.

  • உங்கள் வீட்டின் கூரையில் இரண்டு கிலோவாட் சோலார் பேனலை நிறுவினால், பகலில் 10 மணி நேரம் சூரிய ஒளி ஏற்பட்டால் சுமார் 10 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மாதத்தை நாம் கணக்கிட்டால், இரண்டு கிலோவாட் சோலார் பேனல் சுமார் 300 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.

சோலார் பேனல்களை வாங்குவது எப்படி?

  • சோலார் பேனல்களை வாங்க மாநில அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தை தொடர்பு கொள்ளலாம்.

  • மாநிலங்களின் முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

  • ஒவ்வொரு நகரத்திலும் உள்ள தனியார் விற்பனையாளர்களிடமும் சோலார் பேனல்கள் கிடைக்கின்றன.

  • மானியத்திற்கான படிவம் அரசு அலுவலகத்திலிருந்து கிடைக்கும்.

 

சோலார் பேனல்கள் பராமரிப்பு

சோலார் பேனலைப் பராமரிப்பதற்கு நீங்கள் அதிக செலவு செய்யவேண்டியது இல்லை. ஆனால் அதன் பேட்டரி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். இதன் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாய். இந்த சோலார் பேனலை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக நகர்த்த முடியும்.

500 வாட்ஸ் வரை சோலார் பேனல்கள் கிடைக்கும்

சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. தேவைக்கேற்ப, 500 வாட் வரை திறன் கொண்ட சூரிய சக்தி பேனல்களை நிறுவ முடியும். இதன் கீழ், ஒவ்வொரு ஐநூறு வாட் திறனை நிறுவ 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

மேலும் படிக்க...

பணம் செலுத்த இனி எந்த Cardம் தேவையில்லை -வாட்ச் இருந்தால் போதும்!

வீட்டு நகைகள் தான் பெரிய முதலீடு : எஸ்பிஐ-யின் தங்கம் பணமாக்குதல் திட்டம்!

English Summary: Profitable Business Idea: With just Rs75000 investment .. you can get good income from home for 25 years !! Published on: 17 March 2021, 03:28 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.