கறவை மாடுகள் அதிகளவில் கழுநீர், தானியம் சாப்பிடுவதால் அமிலத்தன்மை அதிகமாக வாய்ப்புள்ளது. அமிலத்தன்மை 6.5 முதல் 7-லிருந்தும், அதற்கு கீழே 5.8 வரை குறையும் போது 'ருமேனின்' இயக்கத்தை நிறுத்துகிறது. இதனால் பசியின்மையும் பால் உற்பத்தியும் குறைந்துவிடும்.
முருங்கை (Drumstick)
முருங்கையில் 20 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. 46 ஆக்ஸிஜனேற்றிகள், 36 அழற்சி எதிர்ப்பு கலவைகள் மற்றும் 90க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. இது சிறந்த ஊட்டச்சத்து கீரை. இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் ஏ, பி, பி1 - 3, பி6, சி, இ, மேக்ரோ தாதுக்கள், பைட்டோ ஊட்டச்சத்துகள் உள்ளன.
இது பால் உற்பத்தியை மேம்படுத்துகிறது. பாலின் தரம் அதிகரிக்கிறது. மூட்டு வலியைத் தடுக்கிறது. முருங்கையில் நார்ச்சத்து உள்ளதால் செரிமான அமைப்பை ஒழுங்குபடுத்தி மலச்சிக்கலை நீக்குகிறது. வயிற்றுப் புண் மற்றும் தொற்றுகளை குணப்படுத்த உதவுகிறது. பூஞ்சை காளான் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் முருங்கையில் இருப்பதால் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது. மாட்டு சாணம், கோமியத்தின் தரமும் அதிகரிக்கிறது.
முருங்கை இலையை நேரடியாக கொடுத்தால் பசுக்கள் விரும்பி சாப்பிடாது. சிலநேரங்களில் இலையை தின்று விட்டு கசப்புத்தன்மையால் காம்பு, தண்டை விட்டு விடும். இலையை உதிர்த்து காயவைத்து மக்காச்சோள மாவு சேர்த்து சேவு போன்று தீவனமாக தயாரிக்கிறோம். ஒரு நாளைக்கு 5 கிலோ தீவனம் சாப்பிடும் போது 50 கிராம் முருங்கை சேவு கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும்.
ஹரிஹரன்
மிராக்கிள் ஆர்கானிக்ஸ்
மதுரை
73585 73411
மேலும் படிக்க
அதிக மகசூல் பெற இயற்கை முறையில் பூச்சி விரட்டி செய்வது எப்படி?
Share your comments