வளி மண்டல சுழற்சி காரணமாக, குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு 'ரெட் அலேர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல சுழற்சி
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ரெட் அலேர்ட்
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு (ரெட் அலர்ட்) வாய்ப்பு உள்ளது.
கனமழை எச்சரிக்கை
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!
கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!
Share your comments