1. விவசாய தகவல்கள்

சென்னையில் வேர்கள், கிழங்குகள் திருவிழா: முழு விவரம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Roots and Tubers Festival in Chennai

சென்னை, தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில், சென்னை வேர்கள் மற்றும் கிழங்கு திருவிழா இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இன்று காலை 10:00 முதல், இரவு 7:00 மணி வரை நடைபெற்ற திருவிழாவை, தமிழ்நாடு நிலையான மற்றும் முழுமையான வேளாண்மைக்கான கூட்டமைப்பு, ஆர்கானிக் பார்மர்ஸ் மார்க்கெட், பாதுகாப்பான உணவு கூட்டமைப்பு, தக்கர் பாபா வித்யாலயா மற்றும் சஹஜ சம்ருதா ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. இன்றும், நாளையும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வேர்த் திருவிழா (Root Festival)

விவசாயிகள் மற்றும் விதை பாதுகாப்பாளர்கள் ஒன்றிணைந்து பல்வேறு பாரம்பரிய நெல், காய்கறி விதைகளையும் கிழங்குகளையும் காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர். ஆர்கானிக் உணவுகள், ஆர்கானிக் ஆடைகள், மாடி தோட்ட பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இந்த கிழங்குகளை வளர்ப்பது மற்றும் உட்கொள்வதன் முக்கியத்துவம், இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய விதைகள் குறித்து நிபுணர்கள் கருத்தரங்கங்களும் நடைபெறும்.

மேலும், பல சமையல் கலைஞர்கள் மற்றும் பெண்கள், இந்த கிழங்கு வகைகளிலிருந்து சுவாரசியமான உணவுப் பொருட்களை சமைக்கும் சமையல் போட்டியும் நடைபெற உள்ளது.பொருட்கள் வாங்க வருவோர், கட்டாயம் பிளாஸ்டிக் அல்லாத துணிப்பைகளோ, பாத்திரங்களோ கொண்டு வர வேண்டும் என, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் தகவல்களுக்கு, 97909 00887; 94457 99577; 99622 25225 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க

தென்னையில் நீர் மேலாண்மை: ஈரப்பதத்தை தக்க வைக்கும் மூடாக்கு!

விவசாயப் பயிர்களுக்கு ட்ரோன் வழியாக மருந்து தெளிப்பு!

English Summary: Roots and Tubers Festival in Chennai: Full Details! Published on: 09 April 2022, 09:54 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.