1. விவசாய தகவல்கள்

காளான் வளர்ப்பு கூடம் அமைக்க ரூ.1லட்சம் மானியம்| கத்தரி விலை முன்னறிவிப்பு| Millet Lunch

Deiva Bindhiya
Deiva Bindhiya

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் காளான் வளர்ப்பு கூடம் அமைக்க - மொத்த விலையான ரூ.2 லட்சத்தில் 50 சதவீத மானியமாக ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும். இத்திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்துப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற தோட்டக்கலை துறையின் அதிகார்பபூர்வ இணையதளமான www.tnhorticulture.tn.gov.in/tnhortinet/registration new.php மூலம் பதிவு செய்ய துறையால் அறிவுறுத்தப்படுகிறது.

2. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வீட்டில் - Millet Lunch

ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக (IYOM) அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து வரும் ஆண்டில் தினை உணவு மற்றும் உற்பத்தி என பல நோக்கத்துடன், தினை ஆண்டு கொண்டாட உள்ள நிலையில், கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் தினை உணவு திருவிழா என்ற பெயரில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். இதை தொடர்ந்து டிசம்பர் 22 மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வீட்டில் மில்லட் லன்ச் என்ற நோக்கில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிய உணவில் பல முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர்.

3.வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் சுமார் 2 கோடி வரை 3% வட்டியில் மானியம்

வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் சுமார் 2 கோடி வரை 3% வட்டியில் மானியம் வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி பெற தகுதியான திட்டங்கள், இ-மார்க்கெட்டிங் தளங்கள் உட்பட் சப்ளை செயின் சேவைகள், லாஜிஸ்டிக் வசதிகள். சேமிப்பு கிடங்குகள, சைலோஸ், பேக் ஹவுஸ், முதன்மை செயலாக்க மையங்கள், குளிர் சங்கிலி. மதிப்பீடு, வரிசைப்படுத்துதல் மற்றும் தரப்படுத்துதல் அலகுகள், கரிம உள்ளீடு உற்பத்தி, உயிர் ஊக்கி உற்பத்தி அலகுகள். போன்ற திட்டங்களுக்கு இந்த நிதியுதவு பெறலாம். தொடர்புக்கான முகவரி தொலைபேசி எண் மற்றும் இணையதளம் இதோ, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை CIPET சாலை, சென்னை- 600032 தொலைபேசி 044-22253886, இணையதளம்: www.agrimark.tn.gov.in

4.தமிழகத்தில் 3500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரல்ரேகை மூலம் பொருள் வாங்க முடியாதவர்கள் கண் கருவிழி கொண்டு பொருள் வாங்கலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் மழைக்காலங்களில் நெல்மணிகள் நனையாமல் இருப்பதற்காக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் ரூ.238 கோடி மதிப்பில் மேற்கூரை மூடிய செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது எனவும் தெரிவித்தார். ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும், இது அமலுக்கு வரும்.

5.மூங்கில் சாகுபடியை அதிகரிக்க தனித்துவமான திட்டம்

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூலம் பிராஜக்ட் போல்டு என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வறண்ட நிலங்களில் மூங்கில் சோலை என்ற இத்திட்டம், 4 ஜனவரி 2021 அம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் மாவட்டத்தில் பழங்குடியின கிராமமான நிச்சலா மண்ட்வாவில் தொடங்கப்பட்டது. வறண்ட பகுதியான இப்பகுதியில் நிலத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.

6.பருப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள, இந்திய விவசாயிகளுக்கு, மத்திய அரசு ஆதரவு

நாட்டில் கூடுதலாக பருப்பு உற்பத்தி செய்வதற்காக இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மேற்கொள்ளும். 2023ம் ஆண்டு முழுவதும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் பருப்பு வகைகள் கிடைப்பதற்கும், அதனை தடையின்றி இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்களுக்கு ஆதரவளிக்கப்படும் என்று நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங், இந்திய பருப்பு வகைகள் சங்கக் கூட்டத்தில் நேற்று தெரிவித்தார்.

7.கொரமண்டல் உர நிறுவனத்தின் சார்பாக விவசாயிகளுக்கு வெள்ளிக்கட்டி பரிசளிப்பு

கொரமண்டல் இண்டர்நேசனல் லிட் உர நிறுவனம் சார்பாக குரோமோர் கொண்டாட்டம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான மாபெரும் பரிசுமழைத் திட்டம் கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் குரோமோர் 28-28 மற்றும் பாரம்பாஸ் உரங்கள் இரண்டு மூட்டைக்கு ஒரு கூப்பன் வழங்கி எஸ்எம்எஸ் மூலம் விவசாயிகள் பங்கேற்கின்றனர். இத்திட்டம் ஜனவரி 15 வரை இருப்பதால் விவசாயிகள் அனைவரும் குரோமோர் உரங்களை வாங்கும்போது கூப்பனை கேட்டு வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம் என்று கொரமண்டல் உரநிறுவனத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8.TNAU: கத்தரிக்காய்களின் விலை முன்னறிவிப்பு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வு மையத்தின் TN-IAM திட்டத்தின் நிதியுதவி விலைக் கணிப்புத் திட்டம், காய்கறிகளுக்கான சந்தை ஆலோசனையை உருவாக்கியுள்ளது. கத்தரி உற்பத்தி மற்றும் நுகர்வோர்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் (2021-22) மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, கத்தரி சாகுபடி பரப்பளவு 0.24 லட்சம் ஹெக்டேர் ஆகும், இதன் மூலம் தமிழ்நாட்டில் 3.12 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் கத்தரி உற்பத்தியில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் வேலூர் மாவட்டங்கள் உள்ளன. பகுப்பாய்வு முடிவுகளின்படி, நல்ல தரமான கத்தரிக்காய்களின் பண்ணை விலை சுமார் ஒரு கிலோவுக்கு ரூ. 23 முதல் 25 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.மின்னனு வேளாண் இயக்கம் தொடர்பாக வேளாண் அடுக்குத் திட்டத்தின் வழிகாட்டல் குழுவின் 2ம் கட்ட கூட்டம்

டிசம்பர் 21 தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, அவர்கள் தலைமையில் அரசின் மின்னனு வேளாண் இயக்கம் (Digital Agriculture Mission) தொடர்பாக வேளாண் அடுக்குத் திட்டத்தின் (AgsiStack) வழிகாட்டல் குழுவின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் துறையை சார்ந்த அனைத்து தலைமை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

10.தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு நாள்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். முன்னதாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 20, 21, 23 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அது திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடதக்கது. இன்று முதல் டிசம்பர் 24ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க:

விவசாயிகளுக்கு 17லட்சம் மானியம் வழங்கல்| சூரிய சக்தியில் இயங்கும் தினை செயலாக்க அலகு நிறுவ விவசாயிகளுக்கு 35% மானியம்!

கரும்பு விவசாயிகள் போராட்டம்| என் முன்னாடி போட்டோ ஷூட்டா? கடுப்பான யானை!

English Summary: Rs. 1 lakh subsidy for setting up a mushroom nursery| Brinjal Price Forecast| Millet Lunch Published on: 22 December 2022, 03:11 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.