தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு பிவிசி பைப் மற்றும் புதிய மின் மோட்டாா் வாங்க மானிய உதவிகள் வழங்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு பிவிசி பைப் வாங்க ரூ.15,000 மானியமாகவும், புதிய மின் மோட்டாா் வாங்க ரூ.10,000 மானியமாகவும் வழங்கப்படுகிறது.
தகுதி
-
விண்ணப்பதாரா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும்.
-
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
-
விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டியது அவசியம்.
-
தாட்கோ மானிய திட்டத்தில் பயன்பெறாத எஸ்.சி., எஸ்.டி. விவசாயிகளுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும், துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
-
ஏற்கெனவே தாட்கோ நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாடு திட்டம், துரித மின் இணைப்புத் திட்டம் ஆகிய திட்டங்களில் பயன் பெற்றிருந்தாலும் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்.
ஏற்கெனவே தாட்கோ நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாடு திட்டம், துரித மின் இணைப்புத் திட்டம் ஆகிய திட்டங்களில் பயன் பெற்றிருந்தாலும் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
-
ஜாதி சான்றிதழ்
-
வருமானச் சான்றிதழ்
-
குடும்ப அட்டை
-
இருப்பிடச் சான்று
-
சிட்டா
-
பட்டா
-
அடங்கல் அ-பதிவேடு
-
நிலப்பட வரைபடம்
-
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி
மேலே கூறிய ஆவணங்களை விண்ணப்பதாரா்கள் தங்களது ஆகியவற்றை ஆதிதிராவிடா் இனத்தைச் சாா்ந்தவா்கள் எனில் விண்ணப்பங்களை தாட்கோ இணையதள முகவரியில் இருந்து சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள தாட்கோ, மாவட்ட மேலாளா் அலுவலகம், சீலநாயக்கன்பட்டி, சேலம் என்ற முகவரியை அணுகியோ அல்லது 0427-2280348 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டோப் பயன்பெறலாம். இவ்வாறு அவர் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
மேலும் படிக்க...
சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!
இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!
Share your comments