1. விவசாய தகவல்கள்

சூரிய சக்தி பம்ப் செட் பராமரிப்பு மையம் அமைக்க ரூ.4 லட்சம் மானியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs. 4 lakh subsidy for setting up solar pump set maintenance center!

விவசாயம் உள்ளிட்டத் துறைகளில், சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்கள் முக்கியப் பங்காற்றுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் செலவு குறைந்திருக்கும் நிலையில், சூரிய சக்தி பம்ப் செட் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என வேளாண்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மையம் தொடங்க அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும்.


இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் "வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்" மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

பழுது நீக்கி பராமரிக்க

விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.
தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்து தரப்படும் இம்மையங்கள். 8 இலட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன.

ரூ.4 லட்சம்

இதில் 50% மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் மானியம் வழங்கப்படும். மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அனுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

மாவட்ட ஆட்சியரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும். மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்த புள்ளி அடிப்படையில் கண்காணிப்பு பொறியாளர் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்த தொகையினை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். பின்னர் சம்மந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் மையத்தினை நேரில் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத்தொகையினை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும்.

தொடர்புக்கு

கூடுதல் விவரங்களுக்கு அருகாமையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்களை அனுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம்,பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் – 631502 அலைபேசி எண் : 044-24352356 கைபேசி எண் : 9003090440 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு புதிய ரேஷன் கார்டு-அரசு அறிவிப்பு!

அடுத்த வாரம் குறைகிறது சமையல் எண்ணெய் விலை!

English Summary: Rs. 4 lakh subsidy for setting up solar pump set maintenance center! Published on: 10 July 2022, 11:11 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.