புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு ரூ.10,000 வரை மானியம் வழங்கப்படுவதால், விவசாயிகள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.
மின் மோட்டார்
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடிநீர் பாசனத்திற்கு உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அதாவது,மூன்று ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளவர்களுக்கு, பழைய திறனற்ற மின்மோட்டார்களுக்குபதில் புதிய மின் மோட்டார் பம்புசெட்டும், புதிய மின்மோட்டார் பம்புசெட்டுவாங்குவதற்கும் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக 38 விவசாயிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மானியம்
இதில், ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள பழைய திறனற்ற டீசல் பம்புசெட்டு அல்லது மின்மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் விவசாயிகள், புதிய ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறு, குழாய் கிணறுஅமைத்து10 குதிரைத் திறன் வரை புதிய மின்மோட்டார் பம்பு செட்டு வாங்க விண்ணப்பிக்கலாம்.
ஆவணங்கள்
விவசாயிகள், பட்டா, சிட்டா, அடங்கல், நிலவரைபடம், சிறு-குறு விவசாயி சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை ஆகிய விவரங்களுடன் வேளாண்மைப் பொறியியல் துறை உபகோட்டஅலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
ரூ.10 ஆயிரம்
சென்னை தலைமைப் பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும். இதற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம், இதில் எது குறைவோ, அந்த தொகை பின்னேற்பு மானியமாக விவசாயியின் வங்கி கணக்கில் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவிசெயற்பொறியாளர் அலுவலகம் (செல்போன்: 9655708447), கோவில்பட்டி எட்டயபுரம் மெயின் ரோட்டில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 9443276371 என்ற செல்போன் எண்ணிலும், திருச்செந்தூர் முத்துமாலை அம்மன் கோவில் தெருவில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 9443688032 என்ற செல்போன் எண்ணிலும், தூத்துக்குடி மாவட்ட வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை 9443172665 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
தகவல்
செந்தில்ராஜ்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
மேலும் படிக்க...
Share your comments