மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற சோளம், பருத்தி, சூரிய காந்தி, மிளகாய் போன்ற பயிர்களைப் பயிரிடுவது மானாவாரி விவசாயம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் 3.1 மில்லியன் ஹெக்டேரில் மானாவாரிப் பயிர்கள் பரியிடப் படுகின்றன.
மானாவாரி பயிர்களுக்கேற்ற பயிர் நினையியல் தொழில் நுட்பங்கள், நனை நிர்வாகம், ஊட்டச் சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், மண்வளப் பாதுகாப்பு, நீர் வடிக்கும் தொழில் நுட்பங்கள், பண்ணை இயந்திரங்கள் பற்றி தெரிந்து கொண்டு சாகுபடி செய்தால் நல்ல லாபம் பெறலாம்.
பொதுவாக உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, வானிலை சார்ந்த மானாவாரி பயிர்கள் சாகுபடி பற்றி தெரிந்து சாகுபடி செய்தல் நல்லப் பலனைத் தரும்.
இதன் காரணமாக, மானாவாரி விவசாயிகளுக்கு உதவுகின்ற வகையில் நல்ல பலத் திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
திட்டங்கள்
நாடு முழுவதிலும், மானாவாரி விவசாயத் திட்டத்தில் 1000 ஹெக்டேர் மானாவாரி சாகுபடி நிலங்கள் ஒன்று அல்லது இரண்டு கிராம ஊராட்சிகளிலிருந்து தேர்வு செய்யப்படுகின்றன.
அவற்றில் முதலாம் ஆண்டில், 200 தொகுப்புகளும், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 400 தொகுப்புகளுமாக பணிகள் நடைபெறும். மேலும், நடப்பு நிதியாண்டில், 25 மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக, 200 தொகுப்புகள் உருவாக்கப்பட்டு அதன் மூலமாக தொகுப்பு மேம்பாட்டு குழுக்கள், வட்டார குழுக்கள், விவசாய குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த தொகுப்பு மேம்பாட்டு குழுவானது, தேவையான மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி, சிறு தானிய பயிர் மேலாண்மை பணிகளை மேற்பார்வையிட்டு, சாகுபடி பணிகளை வழி நடத்தி செல்லும்.
தானியம் மற்றும் சிறுதானிய பயிர்கள் 2.15 லட்சம் ஏக்கரிலும், பயறு வகைகள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 500 ஏக்கரிலும் சாகுபடிகள் மேற்கொள்ளப்படும்.
விதை மற்றும் உயிர் உரங்கள்
இதற்காக விதை மற்றும் உயிர் உரங்கள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் மானாவாரி தொகுப்பு விவசாயத்தில், உற்பத்தி செய்யப்படுகின்ற விளை பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக, பயறு உடைக்கும் இயந்திரங்கள், சிறுதானிய சுத்திகரிப்பு இயந்திரங்கள் போன்ற இயந்திரங்கள் மற்றும் வேளாண் உபகரணங்கள் அரசு நிதியுதவி மற்றும் மானியத்துடன் வழங்கப்படுகின்றன.
மானாவாரி விவசாய திட்டத்திற்கு, மாநில அளவில் முதன்மை பயிற்சியாளர் ஒருவர், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஐந்து பேர் வீதமாக ஒட்டுமொத்தமாக, 125 பேர் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுவார்கள்.
முதற்கட்டமாக எட்டு மாவட்டங்களை சேர்ந்த வேளாண், வேளாண் பொறியியல் துறைகளை சேர்ந்தவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
சலுகைகள்
மானாவாரி விவசாய திட்டத்தில், ஏக்கருக்கு 500 ரூபாய் வீதம்விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும்.
கிராமங்களில் பன்னைக்குட்டைகள் அமைக்க ஆகும் செலவில் 50 சதவீதத்தை அரசே மானியமாக வழங்குகிறது.
பிரதான் மந்திரி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மானாவாரி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது.
மேலும், மானாவாரி விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், நாற்றுகளும் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது
இந்தத் திட்டம் பற்றி மேலும் விவரங்களை, அந்தந்த பகுதி வேளாண் உதவி இயக்குனர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.
இறக்குமதி செய்யப்படுகின்ற, ஓட்ஸ் போன்றவற்றை தவிர்த்து குதிரைவாலி, தினை, சாமை, கேழ்வரகு, போன்ற தானியங்களை பயன்படுத்தி உள்ளூர் உழவர்களின் வாழ்வு உயர உறுதுணையாக இருப்போம்.
மேலும் படிக்க...
ரக்க்ஷா பந்தன் கொண்டாட்டம் - உங்கள் கைவண்ணத்தில் ராக்கி தயாரிக்க சிம்பிள் டிப்ஸ்!
நண்பேன்டா! உழவனின் நல்ல நண்பனான மண்புழுவை, நண்பர்கள் தினத்தில் போற்றுவோம்!
Share your comments