PM- kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி, ரூ.6,ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்தல் அறிக்கை
ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிஜேபி தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில், வாக்காளர்களைக் கவர பல்வேறு கவர்ச்சிகரமானத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
8 லட்சம் வேலை
மகளிருக்கென பிரத்யேக தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, இலவச எல்பிஜி சிலிண்டர், 6ம் வகுப்பு முதல் 12டம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஸ்கூட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
ரூ.9,000
விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்துடன், ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.9,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டாவிடம் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படுமா எனக் கேட்டதற்கு, இதற்காக குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.
மேலும் படிக்க...
Share your comments