1. விவசாய தகவல்கள்

சர்க்கரைவள்ளி கிழங்கில் மகசூல் தரும் இரகங்கள் என்ன?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

sakkaravalli kilangu

இந்தியாவில், ஊட்டச்சத்து குறைபாட்டை கட்டுபடுத்துவதில் சர்க்கரைவள்ளி கிழங்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது, குறிப்பாக ஆரஞ்சு சதை கொண்ட சர்க்கரைவள்ளி கிழங்கு நாட்டின் பழங்குடி குடியிருப்புகளில் வைட்டமின்-ஏ குறைபாட்டை சரி செய்கிறது.

கால்நடை தீவனம் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் சர்க்கரைவள்ளி கிழங்கு பல்துறை உணவுப்பயிராகக் கருதப்படுகிறது.  ஒடிசா, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை சர்க்கரைவள்ளி கிழங்கு உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும், அவை இந்தியாவில் 76% பரப்பளவிலும் 78% உற்பத்தியிலும் பங்களிக்கின்றன. சர்க்கரைவள்ளி கிழங்கிலுள்ள இரகங்களின் விவரம் பின்வருமாறு-

வர்ஷா:

  • பயிர் காலம்: 120 நாட்கள்
  • மகசூல்: 17-22 டன்/ஹெக்டேர்
  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது

ஸ்ரீ நந்தினி:

  • பயிர் காலம்: 105-120 நாட்கள்
  • மகசூல்: 20-25 டன்/ஹெக்டேர்
  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது

பு சோனா:

  • பயிர் காலம்: 105-110 நாட்கள்
  • மகசூல்: 20-24 டன்/ஹெக்டேர்
  • உப்பு தன்மை கொண்ட நிலங்ககளில் வளரக்கூடியது

பு கிருஷ்ணா:

  • பயிர் காலம்: 110-120 நாட்கள்
  • மகசூல்: 18-22 டன்/ஹெக்டேர்
  • உப்பு தன்மை கொண்ட நிலங்களில் வளரக்கூடியது

பு சுவாமி:

  • பயிர் காலம்: 105-110 நாட்கள்
  • மகசூல்: 20-21 டன்/ஹெக்டேர்
  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது

சர்க்கரைவள்ளிகிழங்கு முக்கியமாக மே-ஜூன் மாதங்களில் மானாவாரி பயிராக பயிரிடப்படுகிறது. செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் நீர்ப்பாசன பயிராக பயிரிடப்படுகிறது. இரண்டாம் நெல் அறுவடைக்குப் பிறகு ஜனவரி முதல் ஏப்ரல் வரை தாழ்நிலங்களில் சர்க்கரைவள்ளிகிழங்கு நெல் பயிர் சுழற்சி முறையில் பயிரிடப்படுகிறது.

நீர்ப்பாசனம்:

  • நடவு நேரத்தில் போதுமான ஈரப்பதம் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • விதை படுக்கை நடவு செய்த 4-5 நாட்களுக்கு ஈரமாக இருக்க வேண்டும்.
  • அறுவடைக்கு 2-3 வாரங்களுக்கு முன்பு நீர்ப்பாசனம் நிறுத்தப்பட வேண்டும்.

உரமேலாண்மை முறை:

தழைச்சத்து: மணிசத்து: சாம்பல்சத்து (கிலோ/ஹெக்டேர்) முறையே 50: 25: 50 என பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லத்துடன் 2/3 பரிந்துரைக்கப்பட்ட அளவு தழை சத்தில்  கொடியை நனைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ அசோஸ்பைரில்லம் மண்ணில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.நடவு செய்த 15, 30 மற்றும் 45 நாட்களில் லிட்டருக்கு 5 மில்லி லிட்டர் மைக்ரோனோல் (சர்க்கரைவள்ளி கிழங்கு) தெளிப்பது நன்மை தரும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில், சராசரி மகசூலாக 10-28 (டன்/ஹெக்டேர்) பெற முடியும். இந்தியச் சந்தைகளில் கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கிற்கு நல்ல டிமாண்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரை தொடர்பான மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: முனைவர் சொ. மோகன், முதன்மை விஞ்ஞானி, ஐ. சி. ஏ. ஆர் -மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீகாரியம், திருவனந்தபுரம்-695017, கேரளா. மின்னஞ்சல்: [email protected]

Read more:

வெற்றிலை வள்ளி கிழங்கில் உயிர் வலுவூட்டல்- மறைந்திருக்கும் பயன்கள்

English Summary: sakkaravalli kilangu yielding varieties full details here

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.