1. விவசாய தகவல்கள்

அதிக மகசூல் தரும் புதிய சோயாபீன் ரகம்-விஞ்ஞானிகள் உருவாக்கம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Scientists develop new high-yielding soybean variety!
Credit : The Economic Times

அதிக மகசூல் தரக்கூடிய, அதே சமயத்தில் பூச்சித் தாக்குதல் எதிர்ப்புத் திறன் கொண்ட புதிய சோயாபீன் விதை ரகத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்தப் புதிய ரகத்திற்கு MACS 1407 என்று பெயரிடப்பட்டுள்ளது.

புதிய ரகம் (New type)

மேற்கு வங்கம், அசாம், ஜார்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பயிரிடுவதற்கு இந்தப் புதிய ரகம் தகுந்ததாக இருக்கும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு காரீப் விதைப்புக் காலத்தில் இந்த விதைகள் விவசாயிகளின் பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 90 மில்லியன் டன் சோயாபீன் உற்பத்தி செய்யப்பட்டது.உண்மையில் இவை, எண்ணெய் வித்துக்களுக்காகவே அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியா முயற்சி (India try)

புரதம், கால்நடைத் தீவனங்கள் மற்றும் பல்வேறு பேக்கிங் செய்யப்பட்டத் தீவனங்களுக்கான விலை மலிவான ஆதாரமாக சோயாபீன் விளங்குகிறது. அதனால் சோயாபீன் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக மாறுவதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

அதிக மகசூல் தரும் (High yielding)

அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் பூச்சித் தாக்குதல் எதிர்ப்பு ரகங்களை உருவாக்குவது இந்த இலக்கை எட்டுவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சவாலை செயல்படுத்தும் முயற்சியாக MACS-அகார்கர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (ARI) ஆனது டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ICAR) உடன் இணைந்து, அதிக மகசூல் தரக்கூடிய சோயாபீன் ரகங்களை உருவாக்கி வருகிறது.

MACS 1407 சோயாபீன்

புனேவில் உள்ள அகார்கர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டானது (Agri research Institute) மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் கலப்பினதொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் MACS 1407 சோயாபீன் ரகத்தை உருவாக்கியுள்ளனர்.

39 குவிண்டால் மகசூல் (Yield 39 quintals)

இந்த ரகமானது ஹெக்டேருக்கு 39 குவிண்டால் மகசூலைத் தரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்த ரகம் அதிக மகசூல் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகமாக அறியப்படுகிறது. நிலத்திலிருந்து 7 செமீ உயரத்தில் வளரக்கூடியதாகவும், உதிர்வுத் தன்மை எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும் இந்த ரகம் உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. 

வடகிழக்கு  இந்தியாவின் மழை பிடிப்புப் பகுதிகளில் இந்த ரகம் தகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.அங்கீகாரம் பெற்ற ரகங்களைக் காட்டிலும் 14 - 19 சதவீதம் அதிக மகசூலையும், தற்போது பயன்பாட்டில் உள்ள சிறந்த ரகத்தைக் காட்டிலும் 17 சதவீதம் அதிக மகசூலையும் மேக்ஸ் 1407 தருவதாக ARI விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இழப்பு இல்லாத மகசூலைப் பெறுவதற்கு ஜூன் 20 முதல் ஜூலை 5 வரையிலான காலம் ஏற்புடையதாக இருக்கும் என்றும், அதனால் இதர ரகங்களுடன் ஒப்பிடுகையில் பருவமழை மாறுபாடுகளைக் கடந்து அதிக பயன் தரக் கூடியதாக மேக்ஸ் 1407 இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க...

உலக பூமி தினம்! பிளாஷ்டிக்கை தவிர்த்து, நம் பூமியை மீட்டெடுப்போம்!

கோடையில் உடல் நலம் காக்கும் கீரைகள்! ஆர்வத்துடன் உழைக்கும் விவசாயிகள்

தேயிலை செடிகளை தாக்கும் சிவப்பு சிலந்தி நோய்! விவசாயிகள் கவலை!

English Summary: Scientists develop new high-yielding soybean variety! Published on: 08 May 2021, 08:27 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.