கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்கக் கோரி, காவிரி டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம் முன் ஜனவரி 22ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என காவிரி விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியத்தில் தென்பிடாகை, மேலக்குருவாடி, திருக்கண்ணபுரம், கீழப்பூகனூர், மோனப்பூதனார், மருங்கூர், எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாயார் பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது :
இழப்பீடு போதாது (Compensation is not enough)
கனமழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 இழப்பீடு என்பது யானைப் பாக்கு சோளப்பொறி போன்றது.
பயிர்க்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை முதல்வர் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
காவிரி டெல்டாவை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.
22ம் தேதி முற்றுகை (Siege on the 22nd)
இவைதான் நாங்கள் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கைகள். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22ம் தேதி, டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!
விவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது!!
ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!
Share your comments