1. விவசாய தகவல்கள்

உயிர்வேலி அமைப்பின் சிறந்த அம்சங்கள்-

T. Vigneshwaran
T. Vigneshwaran

உயிர்வேலி என்பது இரும்பு கம்பிகளோ அல்லது கற்களை அமைப்பது மட்டுமல்ல,உயிர் மரங்களையும் கொண்டு நம் நிலத்திற்கு  அமைக்கலாம்.இந்த உயிர் மரங்கள் வகை வெளியாகள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

கிளுவை,வேம்பு,நொச்சி,பனைமரம்,கள்ளி,கொடுக்கப்பள்ளி, இலந்தை முள்,சவுக்கு மற்றும் காகிதப்பூ போன்ற பல வகை உயிர்வேலிகள் உள்ளன.

கிளுவை,முள் முருங்கை போன்ற வேலிகல் மூலம் படரும் கொடி வகைகள் நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக விளங்குகின்றன.

அதே போல் நமது உணவுக்கு தேவைப்படும் கீரை வகைகளையும் அதில் பயிரிடலாம்,மேலும் அதில் இருந்து சிறந்த லாபத்தையும் பெறலாம்.

வேலிகளின் தொடர்ச்சியாக நடுவில் முருங்கை,அகத்தி போன்ற செடிகளை நட்டு அதன் மூலமும் லாபம் பார்க்கலாம் ,அது நாம் வளர்க்கும் கோழிகளுக்கு சிறந்த தீவனமாக இருக்கும்.

ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்புடன் உயிர் மரவேலிகளில் இரும்பு கம்பிகளை சுற்றி அமைத்தால் வேறு ஏதேனும் விலங்குகள் நிலத்திற்கு வராது,பயிர்கள் சேதமடையாது.

உயிர்வேலிகள் நிரந்திரமானவை ,முதலீடு இல்லாமல் செய்யக்கூடியவை,நமது நிலத்திற்கு சிறந்த அரணாக இருக்கிறது,சரியாக ஒரு ஆண்டில் புதர்கள் வராமல் பாதுகாப்பது நல்லது.

சில  பயிர்களில் காற்று வீசும் காரணத்தினால் மகசூல் குறையும் வாய்ப்பு அதிகரிக்கும்,எனவே அதுபோன்ற பயிர்களுக்கு காற்றிலிரிருந்து காப்பாற்ற,பாதுகாக்க உயிர் வேலிகள் உதவுகின்றன.கற்று அதிகமாக வீசும் நேரத்தில் மண் அரிப்பும் அதிகம் ஏற்படும்,அதனால் அதிக சாதிகள் இருக்கும் மேல் புறத்தில் இருக்கும் மண்ணும் அரிக்காமல் இருக்கவும் உயிர்வேலி உதவியாக இருக்கிறது.

பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் புழுக்களை உட்கொள்ளும் பறவைகளுக்கு தாங்கும் இடமாக நாம்நடும் உயிர் வேலிகள் கூடு கட்டவும் நல்ல இடமாக பயன்படுகிறது.மேலும் உயிர்வேலிகள் அமைக்கும் இடத்தில தேனீ பெட்டிகளை வைத்து தேனீ வளர்ப்பு செய்து வருகிறார்கள்.அதிலி இருந்து லாபம் ஈட்டுகிறாரகள்.உயிர்வேலி அமைப்பது சுற்றுசூழலுக்கு நல்லது.

மேலும் படிக்க:

வேலி ஓரங்களில் எந்த மரக்கன்று நடலாம்?

50% மானியத்தில் சோலாா் மின்வேலி: பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!

இயற்கை வேளாண்மையில் நிலத்தின் ஈர தன்மையை பாதுகாப்பதற்கான யுக்தி

English Summary: Some advantages about setting up live tree fencing Published on: 26 June 2021, 05:11 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.