உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மையைக் குறைப்பதற்காக அங்கக முறை எனப்படும் இயற்கை விவசாயத்தில் காய்கறி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என தென்காசி தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சு.ஜெயபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
-
அங்கக முறையில் தென்காசி மாவட்டத்தில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தில் கீரை வகை பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ,2,500ம், வெண்டை, கத்தரி, தக்காளி, அவரை மற்றும் கொடிவகை பயிா்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3,750ம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
இத்திட்டத்தில் கூடுதலாக இயற்கை முறையில் சாகுபடி செய்ய விரும்பும் தோட்டக்கலை விவசாயிகளுக்கும் வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்கப்பட்டு, அங்கக விவசாய திட்டத்தில் பதிவு செய்ய ஒரு விவசாயிக்கு ரூ.500 மானியமும் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.
-
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் தங்களது நிலப் பட்டா, ஆதாா் அட்டை, நில வரைபடம், பயிா் சாகுபடி திட்ட விவரங்கள், நீா், மண் பரிசோதனை செய்த அறிக்கைகளோடு தங்களது வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி அங்கக வேளாண்மைத் துறையில் பதிவு செய்து உறுப்பினராகி பயன் பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
எந்திர நடவு பணிக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்!
அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பைக் பயணம்- பூர்வகுடி மக்களை சந்திக்க ஏற்பாடு!
Share your comments