Credit : Vivasayam
இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் துணை நீர் மேலாண்மை செயல்பாடுகளுக்கு மானியம் (Subsidy) வழங்கப்படுகிறது. இதற்கென ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மானியம்
பாசன வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, நுண்ணீர் பாசன முறையை அமைக்க முன்வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் துணை நீர் மேலாண்மை பணிகளுக்கு மானியம் வழங்கப் படுகிறது.
பாதுகாப்பான குறு வட்டங்களில் குழாய்க்கிணறு, துளைக் கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீதம் மானியம் (50% Subsidy), அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம், டீசல் பம்புசெட், மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத மானியம் ரூ. 15 ஆயிரத்திற்கு மிகாமலும். வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்லும் வகையில் நீர் பாசனம் அமைக்க 50 சதவீத மானிய தொகை ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமலும், பாதுகாப்பு வேலியுடன் தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு அதற்காகும் செலவில் 50 சதவீத தொகை ஒரு கன மீட்டருக்கு ரூ. 350-க்கு மிகாமலும் நிதிஉதவி ஒரு பயனாளிகளுக்கு ரூ. 40 ஆயிரத்துக்கு மிகாமல் மானியம் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு அழைப்பு
விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க அலுவலர்கள், வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு இநததிட்டத்தில் பயன் பெறலாம் என்று நயினார்கோவில் வேளாண்மை துணை இயக்குனர் பானுபிரகாஷ் தெரிவித்தார். பாசனத்திற்கு அதிக செலவு செய்யும் விவசாயிகளுக்கு இம்மானியம், பெரிதும் உதவியாக இருக்கும். ஆகையால், காலம் தாழ்த்தாது விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து மானியம் பெற வேண்டும்.
மேலும் படிக்க
ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கருப்பட்டியில் கலப்படத்தை தடுக்க சிறப்பு குழு! உணவு பாதுகாப்புத்துறை தகவல்!
Share your comments