இயற்கை வழி வேளாண்மை ஒரு தேர்ந்த உணவு உற்பத்தி முறையாகும். விவசாயிகள் பலரும் இயற்கை வழி வேளாண்மைக்கு திரும்ப ஆர்வம் காட்டும் நிலையில், பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன மாதிரியான முறைகளை பின்பற்றலாம் என TNAU- தோட்டக்கலைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையத்தின் காய்கறிப் பயிர்கள் துறையினை சேர்ந்த முனைவர் கவிதா, தங்கமணி, தமிழ்செல்வி, பவித்ரா ஆகியோர் ஒருங்கிணைந்து பல தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு-
இயற்கை வழி வேளாண்மை என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்களின் வாயிலாக பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளை பேணிப் பாதுகாப்பதாகும். இதனை மண்ணில் உள்ள அங்ககச் சத்தினை அதிகப்படுத்துவதன் வாயிலாக செயல்படுத்த முடியும்.
இயற்கை வேளாண்மை முறையில் பூச்சி நோய் கட்டுப்பாடு
பூச்சி மற்றும் நோய் மருந்துகள் உபயோகிக்காமல் தேர்ந்த மதிநுட்பத்துடனும், எளிய தொழில்நுட்ப அணுகுமுறைகளாலும் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலை போதிய அளவில் கட்டுப்படுத்தலாம். அவை முறையே:
- பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி உள்ள பயிர் இரகங்களை தேர்ந்தெடுத்து பயிர் செய்தல்.
- பயிரிடும் காலத்தை சரியாக திட்டமிடுதல்.
- பயிரிடும் காலத்திற்கான இடைவெளியினை சரியாக தேர்வு செய்தல்
- நன்மை பயக்கும் பூச்சிகளை அதிகம் பெருகுவதால் களைகளை சிறப்பாக கட்டுப்படுத்துதல்.
- மண்ணின் அங்ககச்சத்து அதிகமாவதால் மண்ணின் சத்துக்கள் பன்மடங்கு உயர்ந்து மண்ணில் வாழும் நோய் பரப்பும் பூஞ்சாண வித்துக்களை பரவாமல் தடுக்கிறது.
- தடுப்பு வேலி பயன்படுத்தி பறவைகள் மற்றும் விலங்குகள் பயிரினை தாக்காமல் பாதுகாத்தல்.
- பயிர் வளரும் சூழ்நிலையை முற்றிலுமாக மாற்றி அமைத்து, இயற்கையாகவே மகரந்தச்சேர்க்கையை ஊக்குவிக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்துதல்.
- வேதிப்பொருள் அல்லாத pheromone trap பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுபடுத்துதல்.
இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் அனைவரும் ஒத்துக்கொள்வது என்னவென்றால் கனிம உரங்கள் மற்றும் வேதியியல் பூச்சி மருந்துகள் அதிகமாக பயன்படுத்தினால், பயிரானது பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எளிதில் உள்ளாகிறது என்பது தான். பயிர் சுழற்சி முறையில் பயிர் மேலாண்மை செய்வதாலும், ஊடுபயிர் செய்வதாலும், அங்கக உரங்கள் இடுவதாலும் வேர் புழுக்கள் மற்றும் வேர் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
வேர்ப்பகுதி சுற்றிலும் வாழும் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் பெருகுவதோடு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்துகிறது. எனவே, இயற்கை வேளாண்மை மேலாண்மையால் சுற்றுப்புறச்சூழல் பேணிப் பாதுகாக்கப்படுகிறது.
விவசாயம் சார்ந்த இயற்கை சூழல் நேர்மறையான விளைவுகள் மட்டுமே நிகழும். அவை முறையே மண் பண்படும், வளம் கூடும் மற்றும் கழிவுகள் மறுசுழற்சி முறையால் பயன்படுகிறது. உயிர்சத்துக்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் பயிரில் மகரந்தச்சேர்க்கை ஊக்குவிக்கப்படும்.
Read more:
விவசாயம்.. காளான் வளர்ப்பில் 100 நாள் திட்ட பணியாளர்கள்- வருமானம் ஈட்டி அசத்தும் தட்டட்டி ஊராட்சி
Share your comments