புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், கரும்பு பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்று, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். விவசாயிகள் உடனடியாக இந்த காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
காப்பீடு (Insurance)
கரும்புப் பயிர் காப்பீடு குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் ராபி பருவத்தில் கரும்பு பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள கரும்பு பயிர்களை, புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், கரும்பு பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கருக்கு, 2,840 ரூபாயை, வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி, காப்பீடு செய்யலாம்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள், தங்களது சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து, பயிர் காப்பீடு செய்யலாம்.
கடன் பெறாத விவசாயிகள், பொதுச்சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் காப்பீடு செய்ய, முன் முன்மொழிவு கடிதம், கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல், நடைமுறையில் உள்ள வங்கி பாஸ்புக்கின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை, மொபைல் எண்ணுடன் இணைத்து, காப்பீடு பிரிமீயம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம் என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்!
எலுமிச்சையில் நுண்ணூட்ட மேலாண்மை: மகசூலை அதிகரிக்கும் நுட்பம்!
Share your comments