தேர்தல் நடத்தை விதிகளால், கேரளா வியாபாரிகள் வருகை இல்லாததால், தமிழகத்தின் பல மாவட்டங்களில், காய்கறிகள் மொத்த விற்பனை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கொள்முதல் (Purchase)
தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளை கேரள வியாபாரிகள் நேரில் வந்து, கொள்முதல் செய்து கொள்வது வழக்கம்.குறிப்பாக தமிழக-கேரள எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் இந்த விற்பனை களைகட்டும்.
தேர்தல் நடத்தை விதிகள் (Rules of Electoral Conduct)
ஆனால் வரும் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக, தமிழக - கேரள எல்லையில், வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பறக்கும் படை சோதனை (Flying Force Test)
பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ரூ.50,000க்கு மேல், முறையான ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு வந்தால், பறிமுதல் செய்யப்படுகிறது.
காய்கறி கொள்முதல் குறைவு (Vegetable purchases are low)
இதன் எதிரொலியாக கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள மொத்த மார்க் கெட்டில் விற்பனை சரிந்து, காய்கறிகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் உள்ளூர் மற்றும் கேரளாவியா பாரிகள் பாதிப்புக்கு உள்ளாகியாளனர். இதன் காரணமாக, ஒரு சில வியாபாரிகள் மிகக்குறைந்த அளவே காய்கறிகளைக் கொள்முதல் செய்து, கேரளா கொண்டு செல்கின்றனர்.
விவசாயிகள் வேதனை (Farmers torment)
இதன் அடிப்படையில், பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் இருந்து, மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் தக்காளி, பச்சைமிளகாய், வெண்டை, புடலை மற்றும் கத்தரிக்காய் உள்ளிட்டவற்றின் விலை சரிந்தது.காய்கறிகள் தேக்கம் அடைந்து உள்ளதால், பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட் வியா பாரிகள், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விலை வீழ்ச்சி (price decrease)
காய்கறி மார்க்கெட் நிலவரப்படி, 15 கிலோ எடையுள்ள தக்காளி கூடை அதிகபட்சமாக, ரூ.80க்கு விற்பனையானது. அவரைக்காய் கிலோ - ரூ.10ம், புடலை - ரூ.10, கத்தரிக்காய் - ரூ 15, பச்சைமிளகாய் - ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வருவாய் இழப்பு (Loss of income)
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளால், விவசாயிகளும், மொத்த கொள்முதலில் ஈடுபடும் கேரளா வியாபாரிகளும் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நாள் ஒன்றுக்கு, ரூ.70 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும், பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட்டில், தற்போது 25 சதவீத விற்பனை மட்டுமே நடக்கிறது. இதனால், விவசாயிகள் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர். எனவே விவசாயிகள் மற்றும், வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!
சமவெளி பகுதிகளில், ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சி! கவலையில் விவசாயிகள்!
பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள்! யாரும் கண்டுகொள்ளாத நிலையில், நோட்டாவுக்கு வாக்களிக்க விவசாயிகள் தீர்மானம்!
Share your comments