1. விவசாய தகவல்கள்

ஜூலை 29ல் மாடித்தோட்டம் அமைத்தல் பயிற்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Terrace Gardening Training on July 29th!

மாடித் தோட்டம் அமைப்பது குறித்த யுக்திகளைக் கற்றுத்தரும் வகையில், சென்னையில் வரும் 29ம் தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எந்தத் தொழிலைச் செய்தாலும், அதனைப் பற்றி முறையாகவும், தெளிவாகவும் தெரிந்துகொண்டு, செய்வதே சாலச் சிறந்தது.

நிலைத்து நிற்க (To stand firm)

அதன் முக்கியத் தொழில்நுட்பங்களைக் கூடுதலாகத் தெரிந்து வைத்துக்கொள்வது, இந்தத் தொழிலில் நாம் நிலைத்து நிற்க என்றும் கைகொடுக்கும்.

ஒரு நாள் பயிற்சி (One day training)

அந்த வகையில்,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், மாடித்தோட்டம் அமைத்தல் தொடர்பாக ஒரு நாள் பயிற்சி வகுப்பு ஜூலை 29ம்தேதி நடைபெறவுள்ளது.

வேளாண்மை மையம் ஏற்பாடு (Organized by the Agricultural Center)

சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை கிண்டியில் செயல்படும் வேளாண்மை மையத்தில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

காளான் வளர்ப்புப் பயிற்சி (Mushroom cultivation training)

இதுதவிர, காளான் வளர்ப்பு தொடர்பாக ஒரு நாள் பயிற்சி வகுப்பு ஜூலை 30ம் தேதி நடைபெறவுள்ளது. பயிற்சிக்கான கட்டணம் ரூ.650.

கலந்துகொள்ள (to take part)

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044 22250511, 044-22501960, 86080 40721 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு (For more details)

கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல்தளம், சிப்பெட் எதிரில், கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் தொடர்பு கொண்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இத்தகவலை அம்மையத்தின் தலைவர் எச்.கோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ரூ.20,000 மானியம்!

கரும்புக்குச் சொட்டு நீர்ப் பாசனம் -ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் மானியம்!

English Summary: Terrace Gardening Training on July 29th! Published on: 26 July 2021, 09:25 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.