1. விவசாய தகவல்கள்

உருளைக்கிழங்கு தோண்டுவதை எளிதாக்க விவசாய மிக குறைந்த விலை இயந்திரம்!

Aruljothe Alagar
Aruljothe Alagar

வருடத்தில் 12 மாதங்களும் சந்தையில் உருளைக்கிழங்கின் தேவை உள்ளது, ஏனெனில்  சுவையான உணவுகள் தயாரிப்பதில் உருளைக்கிழங்கு பெரிய பங்கைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உருளைக்கிழங்கு சாகுபடி செய்வதற்கு இதுவே காரணம்.

நீங்கள் உங்கள் உணவில் உருளைக்கிழங்கு சேர்த்து கொள்வதற்கு விவசாய சகோதரர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். உருளைக்கிழங்கு முழுமையாக தயாரான பிறகு அதனை தோண்டி எடுக்கும் வேலை செய்யப்படுகிறது, அதற்கு கடின உழைப்பு தேவைப்படுகிறது என்றே கூறலாம்.

விவசாயிகள் பாரம்பரிய முறையில் உருளைக்கிழங்கை தோண்டி எடுப்பதற்கு அதிக நேரம் மற்றும் உழைப்பும் தேவைப்படுகிறது. இது தவிர, உருளைக்கிழங்கை கையால் தோண்டி எடுப்பதில் அதிக பயிர் வீணாகிறது.

விவசாயிகளின் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, ஒரு விவசாய இயந்திரம் தயாரிக்கப்பட்டது, அதன் பெயர் உருளைக்கிழங்கு தோண்டி.விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கை தோண்டி எடுக்கும் வேலையை  எளிதாக்குகிறது.

உருளைக்கிழங்கு தோண்டி என்றால் என்ன?

தற்போது, ​​பல விவசாயிகள் நவீன விவசாய இயந்திரங்களான உருளைக்கிழங்கு தோண்டி பயன்படுத்துகின்றனர். இந்த விவசாய இயந்திரம் மூலம் உருளைக்கிழங்கை தரையில் இருந்து எளிதாக எடுக்கலாம், இது நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது. உருளைக்கிழங்கு தோண்டுவதில் டிராக்டருடன் பயன்படுத்தப்படும் கத்திகள், சங்கிலி கன்வேயர் பெல்ட், கியர் பாக்ஸ் போன்றவை பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த விவசாய இயந்திரத்தின் மூலம் ஒரு துல்லியமான ஆழத்தை தரையில் அமைக்க முடியும், பின்னர் அதே அளவு ஆழத்தை முழு வயலிலும் தோண்டலாம். இவ்வாறு உங்களது வேலையை இந்த கருவியை பயன்படுத்தி எளிதாக்கலாம். நீங்கள் அதன் ஆழத்தை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். சிறப்பு என்னவென்றால், உருளைக்கிழங்கு சேதப்படாமல் வெளியே எடுக்க முடிகிறது.

உருளைக்கிழங்கு தோண்டலின் அம்சங்கள்

இந்த விவசாய இயந்திரம் உருளைக்கிழங்கை தரையிலிருந்து அகற்றி உருளைக்கிழங்கில் ஒட்டி இருக்கும் மண்ணையும் எடுத்துவிடுகிறது, அதிலிருந்து மிக சுத்தமான உயர்தர உருளைக்கிழங்கு வெளியே வருகிறது.

இந்த விவசாய இயந்திரத்தில் ஒரு கண்ணி மேடை நிறுவப்பட்டுள்ளது, அதில் உருளைக்கிழங்கு வலையின் வட்டத்திலிருந்து விழுகிறது.

சுத்தமான உருளைக்கிழங்கு வயலில் மண் மேற்பரப்பில் விழுகிறது.

இந்த விவசாய இயந்திரத்தைப் பயன்படுத்தி, உருளைக்கிழங்கு சரியான நேரத்தில் தோண்டப்படுகிறது.

உருளைக்கிழங்கு தோண்டியின் விலை

உருளைக்கிழங்கு தோண்டியின் விலை பற்றி பேசினால், அதன் விலை சுமார் 40 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்கி 1.5 லட்சம் வரை நீடிக்கும். இது தவிர, விலை நிறுவனம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுத்தது. இந்த வேளாண் இயந்திரங்களை வாங்குவதற்கு, விவசாய இயந்திரங்களை உற்பத்தி செய்யும் உங்கள் பகுதியின் தனியார் நிறுவனத்தை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

ஜலந்தரின் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி சுக்விந்தர் சிங் கூறுகையில், உருளைக்கிழங்கு விதைப்பு, தோண்டுவதற்கு களை எடுக்கும் வேலையில் விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். நல்ல உருளைக்கிழங்கு விளைச்சலை பெற வயலை தயார் செய்யும் போது, ​​மற்ற பயிர்களை சாகுபடி செய்யும் அதே விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்தலாம். இதற்காக நீங்கள் பவர் டில்லர், ரோட்டேவேட்டர், ஹரோ போன்றவற்றைப் பயன்படுத்தலாம். டிராக்டர், உருளைக்கிழங்கு தோண்டி முதல் மற்ற விவசாய இயந்திரங்கள் வரை உருளைக்கிழங்கு சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க..

சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மூன்ற முக்கியமான அறியப்படாத தீங்கு தரும் விளைவுகள்

English Summary: The most affordable machine for farming to make potato digging easier! Published on: 17 September 2021, 04:34 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.