எல்லா பருவங்களிலும் பழம் தரும் மரமான பன்னீர் ஆப்பிளுக்கு பிற பழ மரங்களை விட குறைவான கவனிப்புத் தேவைப்படுகிறது. இது 20 ஆண்டுகள் வரை மகசூல் தரும். பன்னீர் ஆப்பிளை விதைகள் போடுவதன் மூலமோ அல்லது தண்டு துண்டுகளை நடுவதன் மூலமோ அதிக நடவு செய்யலாம்.
பன்னீர் ஆப்பிளின் வகைகள்
வெள்ளை, ரோஜா மற்றும் சிவப்பு பழங்களைக் கொண்ட பல்வேறு ரோஜா ஆப்பிள் வகைகள் உள்ளன. பேங்காக்கை பூர்வீகமாகக் கொண்ட பன்னீர் ஆப்பிளில் விதைகள் இல்லை. தண்டு துண்டுகளை நடவு செய்வதன் மூலம் இது இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இது மார்ச்-ஏப்ரல் மாதங்களில் விளையும் தன்மை கொண்டது.
மலேசிய பன்னீர் ஆப்பிள் இனிப்புப் பழங்களைக் கொடுக்கும் மற்றொரு வகை. நடவு செய்த ஒரு வருடத்தில் காய்க்க ஆரம்பிக்கும். அதன் வளர்ச்சிக்கு ஏராளமான சூரிய ஒளி அவசியம். இது எல்லா காலங்களிலும் பழங்களைத் தரும். இது விதைகள் மூலம் அதிகமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
விவசாய முறை
பழுத்த பழங்களில் உள்ள விதைகள் பதியம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒரு அடி நீளம், அகலம் மற்றும் ஆழம் கொண்ட துளைகளில் இட்டு நடவு செய்யப்படுகின்றன. நடவு செய்வதற்கு முன் துளைகளில் வேப்பம் பிண்ணாக்கு, எலும்பு உரம் மற்றும் மண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். இத்தகைய உர மேலாண்மை பன்னீர் ஆப்பிள் மரக் கன்றுகள் நன்றாக வளர்வதற்கு உறுதுணையாக இருக்கும்.
இந்த விதைகள் வளர்ந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மரக்கன்றுகளை நடலாம். மே மற்றும் ஜூன் மாதங்களில் மரக்கன்றுகளை மீண்டும் நடலாம். சரியான சூரிய ஒளிபடும் இடத்தில் நட்டால் சிறந்த மகசூலைப் பெற வழிவகையாய் அமையும். சூரிய ஒளி எவ்வளவிற்கு எவ்வளவு படுகிறதோ அவ்வளவு மரக்கன்றுகள் செழுமையாக வளரும். அதே நேரத்தில் வழக்கமான நீர்ப்பாசனம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னீர் ஆப்பிளின் நன்மைகள்
வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நியாசின், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அடங்கிய இந்த பழம், நீரிழிவு நோய், புற்றுநோய் தடுப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான பிரச்சனைகள், வலிப்புத்தாக்கங்கள் உள்ளிட்ட நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டது. இது நீரிழப்புக்கு சிகிச்சையளிப்பதற்கும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும், உடலை புத்துணர்ச்சியூட்டுவதற்கும் பயன்படுகிறது.
பனிப்பிரதேசத்தில் மட்டும் தான் இந்த பன்னீர் ஆப்பிள் வளரும் என்ற கருத்து உண்மையானது அல்ல. எத்தகைய நிலத்திலும் இதைப் பயிரிட்டு வளர்க்கலாம். ஆனால் அதற்கு தேவையான சூரிய ஒளி, நீர்ப்பாசனம் அவசியம் தேவை என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இதை நட்டு ஒரு வருட காலத்திலேயே காய்க்க ஆரம்பிக்கிறது என்பதும் கூடுதல் நன்மை. சிவப்பு, பச்சை நிறம் கொண்ட பன்னீர் ஆப்பிள் கிலோ ரூ.50-க்கும், பிற ரகங்கள் ரூ.70, ரூ.100 என்ற விலையிலும் விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
என்னது? இந்தியா இருளில் மூழ்கும் அபாயமா?
100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் ஃபெர்டிகுளோபல் டிரான்ஸ்ஃபார்மிங் உர உற்பத்தி
Share your comments