1. விவசாய தகவல்கள்

TNEB: விவசாய மின் இணைப்புக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
TNEB: From today apply for agricultural electricity connection on website

Electrical Connection for Agriculture: விவசாய மின் இணைப்புக்கு இணையதளம் (Online) வாயிலாக விண்ணப்பிக்கும் திட்டத்தை (Application) தமிழக மின் வாரியம் (Tamilnadu Electricity Board), இன்று முதல் செயல்படுத்துகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் விண்ணப்பிக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு: வீடு, தொழில்சாலை, வணிக பிரிவுகளில் மின் இணைப்பு பெற விரும்புவோர், மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவசமாக மின் விநியோகம் செயல்ப்படுத்தபடுகிறது. இதனால், விவசாய மின் இணைப்பு பெற விரும்புவோர், மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் நேரில் விண்ணப்பம் அளித்து வந்தனர்.

இந்நிலையில், மின் வாரியம் நிதி நெருக்கடியில் இருப்பதால் விவசாயத்திற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தமிழக அரசு ஒப்புதல் அளிப்பதற்கு ஏற்ப ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில், விவசாயத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

July Bank Holiday 2022: எத்தனை நாட்கள் தெரியுமா?

அதன்படி, பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு, சீனியாரிட்டி அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதில், நேரடி விண்ணப்ப பதிவில் தவறுகள் நடக்கின்றன என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. எனவே, விவசாய மின் இணைப்புக்கும், இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, மிண் வாரியம் இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடதக்கது.

www.tangedco.gov.in

https://cms.tn.gov.in/sites/default/files/forms/agri_connection.pdf  

https://www.tangedco.gov.in/index.html

மேலும் படிக்க:

எரிவாயு சிலிண்டர் விலை ரூ.187 குறைந்தது!

அத்திப்பழம் சாகுபடி: முன்னோடி விவசாயியின் அனுபவம்!

English Summary: TNEB: From today apply for agricultural electricity connection on website Published on: 01 July 2022, 11:38 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.