தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருவதால், அனைத்து பயிர்களுக்கும், மூடாக்கு இட்டு, ஈரப்பதம் காக்குமாறு கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
வறண்ட வானிலை (Dry Weather)
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. பகல் வேளைகளில் வெயில் வாட்டி வதைக்கிறது.
அறிவுறுத்தல் (Instruction)
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதியவர்கள் பகல் வேலைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. மக்களும், உடல்நலம் கருதி, நீர் ஆகாரங்கள், பழச்சாறுகள் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உழவன் செயலி (Uzhavan-App)
இந்நிலையில், வறண்ட வானிலையால் பயிர்கள் பாதிக்கப்படும் நிலையில், அவற்றைப் பாதுகாப்பது குறித்து, உழவன் மொபைல் செயலி வாயிலாக, திருப்பூர் மாவட்ட விவசாயி களுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பின்வரும் அறிவுரைகளை வழங்கியுள்ளது.
மூடாக்கு (Close)
திருப்பூர் மாவட்டத்தில், வறண்ட வானிலை துவங்கியுள்ளது. அதிகப்பட்ச வெப்பநிலை, 35 டிசிரி செல்சியஸ் ஆக இருக்கும் வறண்ட வானிலையால், அனைத்து பயிர்களுக்கும் நீர்ப்பாசனம் செய்து, மூடாக்கு இட்டு, மண் ஈரப்பதத்தை பாதுகாக்கலாம்.
பூச்சிகள் தாக்கம் (Impact of insects)
வளர் மற்றும் காய்க்கும் பருவத்திலுள்ள, தக்காளிச் செடிகளில், சாறு உறிஞ்சும் பூச்சிகளின், பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது இதைக்கண்காணித்து, மீன் எண்ணெய் மற்றும் ரோசின் சோப் லிட்டருக்கு, 25 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
தென்னை (Coconut)
தென்னை மரத்தைச் சுற்றி, உள்நோக்கிய, சாய்வு வட்டப் பாத்திகளை அமைத்தால், கோடை மழை நீரை தக்க முறையில், மேற்பகுதியில் சேமிக்க உதவும். இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!
சமவெளி பகுதிகளில், ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சி! கவலையில் விவசாயிகள்!
பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள்! யாரும் கண்டுகொள்ளாத நிலையில், நோட்டாவுக்கு வாக்களிக்க விவசாயிகள் தீர்மானம்!
Share your comments