ஆதிதிராவிட பழங்குடியின வகுப்பை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 சதவீத மானியத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் விநியோகம் செய்யப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி அல்லது
http://aed.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் பொறியியல் துறையை அணுகவும்.
2.50% மானியத்தில் மண்ணில்லா விவசாயம்: ரூ.15,000 வழங்கல்
மண்ணில்லா விவசாயம், குறைந்த உற்பத்தி இடத்தில் காய்கறிகளை பயிரடலாம், பொதுவாக இம்முறையை ஹைட்ரோபோனிக்ஸ் என்கின்றனர். இம்முறை விவசாயம் செய்ய 50 சதவீத மானியத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெருநகரங்களுக்கு பின்னேற்புமானியமாக ரூ.15,000/- வழங்கப்படும். இவ்வாறான விவசாயம், அனைத்து வகையான கீரைகள், தக்காளி மற்றும் வெள்ளரி போன்றவைக்கு பயன்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/index.php Website-இல் பதிவு செய்து பயன்பெறலாம்.
3.35 விவசாய பயனாளிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினார்: S.M.NASAR
திருவள்ளூர் மாவட்ட, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக பூவிருந்தவல்லி ஒன்றியம், வெள்ளவேடு (நேமம்) புதிய துணை வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாஸார் 5 துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடங்களை முதற்கட்டமாக திறந்து வைத்து, மேலும் 35 விவசாய பயனாளிகளுக்கு 24 லட்சம் மதிப்பிலான இடுபொருட்களை, உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷண்சாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும் படிக்க: ஆளில்லா விமானம் தெளிக்கும் நடவடிக்கை குறித்த நேரடி செயல் விளக்கம்
4.தக்காளி விவசாயிகள் அரசின் தலையீட வேண்டும் என கோரிக்கை: காரணம்
கோயம்பத்தூர் பண்ணை வாசலில் கிலோ 6 ஆக சரிந்துள்ள தக்காளி விலையை, தமிழக அரசு தலையிட்டு நிலைப்படுத்தக் கோரி, ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்கள் கஷ்டத்தை வெளிப்படுத்தும் வகையில் காய்கறிகளை வழிப்போக்கர்களிடம் கிலோ 5 ரூபாய்க்கு விற்றனர். விவசாயிகளுக்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது: சமீபத்தில் பெய்த மழையால் தக்காளி பயிர்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன, இருப்பினும் பயிர்கள் சில காபாற்றப்பட்டன, அதற்கு நியமான விலை கிடைக்க வேண்டும். “விலை வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண அரசு ஆய்வு நடத்த வேண்டும். விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க: பசுமை தமிழகம் இணையதளத்தில் புதிய பகுதி சேர்ப்பு - விவரம் உள்ளே..
5.வானிலை தகவல்
இன்று வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழிவு காணப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிப்புரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ததது. நாளை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை, ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் இன்று காலை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
G20: 3 நாள் கூட்டம் இந்தூரில் தொடக்கம், விவசாய பெருமக்களின் சங்கமம்
Share your comments