வேளாண் கருவிகள் என்பவை விவசாயத்திற்கு அடிப்படையான ஒன்று ஆகும். வேளாண் கருவிகளில் மிக இன்றியமையாத ஒன்றாக இருப்பது டிராக்டர் ஆகும். அந்த டிராக்டரைச் சொந்தமாக வாங்க வங்கியில் லோன் பெறுவது எப்படி என்பதைக் குறித்துதான் இப்பதிவு விளக்குகிறது.
ஒவ்வொரு விவசாயிகளுக்கும், தாங்களே சொந்தமாக வேளாண் கருவிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான பொருளாதார நிலை அவர்களிடம் இருக்காது. அந்த கவலையைப் போக்கும் நிலையில் அரசே வங்கிகளில் குறைந்த வட்டியில் டிராக்டர் வாங்க லோன் வழங்குகிறது. விவசாயத்திற்குத் தேவையான டிராக்டர், டிராக்டருக்கான உதிரி பாகங்கள், வேளாண் கருவிகள், கடன் காப்பீடு ஆகியவைகளை வங்கியில் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை SBI வங்கியில் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மஹிந்தரா ஃபினான்ஸ்-இலும் டிராக்டர் வாங்க லோன் வழங்கப்படுகிறது.
வங்கியில் எவ்வாறு டிராக்டர் லோன்(Loan) பெறுவது?
வங்கியில் டிராக்டர் வாங்குவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும், டிராக்டர் வாங்க வேண்டிய விண்ணப்பத்தினையும் சமர்பித்த ஏழு நாட்களிலேயே லோன் வழங்கப்படுகிறது.
டிராக்டர் வாங்கக் கொடுக்கப்படும் லோனை மாத முறையிலும் அல்லது 6 மாத முறையிலும் அல்லது 1 வருடம் முறையிலும் செலுத்தலாம். இந்த லோனைச் சரிவரக் கட்டினால் வங்கியின் சார்பில் வட்டி விகிதத்தில் 1% வட்டியினைச் சலுகையாகப் பெறலாம் எனக் கூறப்படுகிறது. இந்த லோனிற்கான வட்டி விகிதம் ஆண்டு ஒன்றுக்கு 11.95% ஆகும்.
தேவையான சான்றுகள்
- விண்ணப்பப் படிவம்
- புகைப்படம் 3
- வாக்காளர் அடையாள அட்டை
- பான் கார்டு
- ஆதார் கார்டு
- நிலப் பத்திரம்
- டிராக்டர் வாங்க Quotation
- வழக்கறிஞர் சான்று அறிக்கை
வங்கியில் முன்னரே கடன் ஏதேனும் பெற்றிருந்தால் அதை முறையாகக் கட்டி வருவதர்கான ஆவணங்களை இணைக்க வேண்டும். டிராக்டர் வாங்கிய பின் வங்கியின் பெயரில் எழுதிக் கொடுத்த RCபுக் பதிவு சான்றிதழ் மற்றும் புதிய டிராக்டர் வாங்கியதற்கான ஒரிஜினல் ரசீது ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்தரா ஃபினான்ஸ்-இல் எவ்வாறு லோன் பெறுவது?
மஹிந்தரா ஃபினாஸ்-இல் நில அடமானம் இல்லாமல் டிராக்டர் லோன் பெறலாம் எனக் கூறப்படுகிறது. மஹிந்தரா ஃபினான்ஸ்-இன் சிறப்பம்சங்களாகக் கீழ் உள்ளவை இருக்கின்றன.
ஒப்புதல் கிடைத்தவுடன் இரண்டு நாட்களில் லோன்(Loan) வழங்கப்படுகிறது
அனைத்து வகை டிராக்டர்களுக்கும் லோன் கிடைக்கும்.
நில அடமானம் இல்லாத சுலபமான கடன் ஒப்புதல் கிடைக்கும்.
தேவையான சான்றுகள்
- KYC ஆவணங்கள்
- கடன் திருப்பிச் செலுத்துதலுக்கான வருமான ஆதாரம்
- நில உரிமையாளர் ஆவணம்.
மேலும் படிக்க: Banks that Offer Tractor Loans at Cheap Rates in India
செயல்முறை
- மஹிந்தரா ஃபினான்ஸ்-க்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
- எந்த வகையான லோன்(Loan) பெறவேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து உறுதி செய்தல் வேண்டும்.
- ஒப்புதல் பெற வேண்டும்.
- பிறகு லோன் கிடைக்கும்.
எனவே, உங்களுக்குத் தேவையான லோனினைப் பெற்றுச் சொந்தமாக டிராக்டர் வாங்கி விவசாயத்தில் லாபத்தைப் பெருக்குங்கள்.
மேலும் படிக்க
குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் பெறுவது எப்படி?
உணவுத் துறையில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!
Share your comments