மதுரை விவசாய கல்லுாரி உழவியல் துறை சார்பில் பாரம்பரிய நெல் ரகங்கள் விளைவிக்கப்பட்டு விதைகள் விற்பனைக்கு உள்ளன. பாரம்பரிய இரக நெல் விதைகளை அறுவடை செய்வதில் தற்போது விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். தாமதிக்காமல் உடனே சென்று நெல் விதைகளை விவசாயிகள் வாங்கிச் செல்லலாம்.
பாரம்பரிய நெல் ரகங்கள் (Traditional Paddy Types)
துறைத்தலைவர் துரைசிங் கூறியதாவது: பாரம்பரிய ரகங்கள் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை. 120 -135 நாட்கள் பயிர். சம்பா சீசனுக்கு ஏற்றது. குள்ளக்கார், கருங்குறுவை, சின்னார், சொர்ணமசூரி பூச்சி, நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் கொண்டது. குழியடிச்சான் களர் நிலத்திற்கும், கிச்சடி சம்பா மானாவாரிக்கும், நொறுங்கன் மணல் கலந்த மானாவாரிக்கு ஏற்றது. சீரக சம்பா, சிவப்புக்கவுனி வாசனை அதிகமுள்ளது.
ஆனைக்கொம்பன் வறட்சியை தாங்கும். மாப்பிள்ளை சம்பா நான்கு அடி தண்ணீரிலும் சாயாது. கொத்தமல்லி சம்பா, பனங்காட்டு குடவாழை ரக விதைகளும் உள்ளன.
தொடர்புக்கு (Contact)
ஏக்கருக்கு 30 கிலோ விதை தேவை. ஒரு கிலோ விதை ரூ.50க்கு கிடைக்கும். பாரம்பரிய நெல் விதைகள் வேண்டுமானால் கீழ்க்கண்ட மொபைல் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புக்கு : 79049 34774.
குறைந்த விலையில் தரமான விதைகள் கிடைப்பதால், விவசாயிகள் உடனே தொடர்பு கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
பாசனத்திற்கு வைகை தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!
நிழல்வலை குடிலில் கருணைக்கிழங்கு சாகுபடி செய்து அசத்துகிறார் விவசாயி மந்தையன்!
Share your comments