1.வெள்ளாடு, செம்மறியாடு மற்றும் வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி
2.குறுவை தொகுப்பு திட்டத்திற்கு மானியத்துடன் உரம்
3.விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநர் ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு
4.கேரள மாநிலத்தில் மழை: பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
5.தமிழ்நாடு வானிலை நிலவரம்
வெள்ளாடு, செம்மறியாடு மற்றும் வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி
சேலம் மாவட்டத்தில், கால்நடை வளர்ப்பில் பல புதிய தொழில் நுட்பங்களையும், கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சம்பந்தப்பட்ட இதர தொழில் நுட்பங்களையும், ஆண் மற்றும் பெண் விவசாயிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வமான விவசாயிகள் என அனைவருக்கும் இலவசமாக பயிற்சிகளை அளித்து உதவி புரிந்து வருகிறது. அவ்வகையில், இம்மயத்தில் வரும் வியாழக்கிழமை 14ஜூலை 2022 அன்று வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு பயிற்சியும், அடுத்த வியாழன்று 21 ஜூலை 2022 வெண் பன்றி வளர்ப்பு பயிற்சியும் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சேலம் தொடர்புக் கொள்ளலாம்.
குறுவை தொகுப்பு திட்டத்திற்கு மானியத்துடன் உரம்!
தமிழ்நாடு அரசு 2022-23ஆம் ஆண்டு குறுவை நெல் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பாதுக்காக்கவும், குறுவை தொகுப்பு திட்டத்தினை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இத் திட்டத்தின் மூலம், குறுவை பருவத்தில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக விதைகள், மண்ணில் இடும் நுண்ணுயிரி மற்றும் நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து ஆகிய இடுபொருட்களுக்காக பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 வரையிலும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் ரூ.5,600 வரையிலும் வழங்கப்பட உள்ளது. குறுவைத் தொகுப்புத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு, விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். ஒரு விவசாயி அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநர் ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு
தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் மூலம் தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் இரகங்களில் விதை உற்பச்சி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் ஜி.வளர்மதி, ஈரோடு மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு விதைச்சான்று மற்றும் விதை ஆய்வு பணிகளை ஆய்வு செய்தார்.
கேரள மாநிலத்தில் மழை: பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இடுக்கி மாடவட்டத்தில் பெய்து வரும் கன மழையினால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணையின் நீர் மட்டம் நேற்று காலை நிலவரப்படி 128.40 அடியாகும்.
தமிழ்நாடு வானிலை நிலவரம்
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்ல பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று முதல் 15 ஆம் தேதி வரையில் இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
Bangalore தக்காளி ரூ.12க்கு விற்பனை! நாட்டு தக்காளியின் விலை என்ன?
தக்காளி காய்ச்சல் குறித்து அச்சம் வேண்டாம்: சுகாதாரத்துறை அமைச்சர் நம்பிக்கை
Share your comments