திருந்திய நெல் சாகுபடி (Transformed Paddy Cultivation) முறையில் பல்வேறு பயன்கள் கிடைப்பதால், விவசாயிகள் இதனை மேற்கொள்ள முன்வரலாம் என வேளாண் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோட்பாடுகள் (Concept)
-
பாய் நாற்றங்கால் அமைத்து விதைப்பு செய்தல்
-
குறைந்த விதையான 14 நாட்கள் வயதுடைய இளம் நாற்றுக்கள்
-
குத்துக்கு ஒரு நாற்று நடவு செய்தல்
-
ரோட்டு வீடர் அல்லது கோனோ வீடர் என்ஸனும் களைக்கருவிகளை உபயோகித்து மண்ணை கிளரி விட்டுக் களையைக் கட்டுப்படுத்துதல்
-
நீர் மறைய நீர்க்கட்டுதல்
பயன்கள் (Benefits)
-
குறைந்த விதை அளவு போதுமானது
-
நாற்றங்கால் பரப்பளவு மிகவும் குறைவதால் பராமரிப்பு செலவு குறைகிறது
-
குறைந்த வயதுடைய நாற்றுகளை நடுவதினால் பக்க தூர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
-
அதிக இடைவெளியல் எண்ணிக்கை குறைகிறது
-
பெண்களைக் கொண்டு பாய் நாற்றங்களை மிக சுலபமாக அமைக்கலாம்.
-
களை கருவியினை பெண்களைக்கொண்டு சுலபமாக இயக்கலாம்.
-
சதுர முறையில் நடவு செய்வதால் பயிர்களுக்குத் தேவையான சூரிய ஒளி காற்று மற்றும் ஊட்டச்சத்துகள் தடையின்றி கிடைக்கிறது.
-
உற்பத்தி திறன் மிகுந்த பக்கத் தூர்கள் அதிகம் தோன்றுவதால் அதிக தானியம் மற்றும் வைக்கோல் மகசூல் கிடைக்கிறது.
-
நடைமுறையில் உள்ள நீர் பாசன முறையில் தேவைப்படும் நீரினைக் கொண்டு இருமடங்கு பரப்பில் திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ளலாம்
தகவல்
முனைவர் அனுராதா
மண்ணியல் துறை
மேலும் படிக்க...
PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!
நெற்பயிரைத் தாக்கும் குருத்துப்பூச்சி -கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!
Share your comments