பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் 2020-21 சந்தைப் பருவத்துக்கு அனைத்து கட்டாய காரீஃப் பயிர்களுக்குமான (Karif crops) குறைந்தபட்ச ஆதார விலைகளை (MSPs) அதிகரிக்க அனுமதி அளித்துள்ளது.
வேளாண் பயிர்களைப் பயிர் செய்தவர்களுக்கு சரியான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசு 2020-21 சந்தைப் பருவத்துக்கான காரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதார விலைகளை அதிகரித்துள்ளது.
குறந்தபட்ச ஆதரவு விலையில் அதிகபட்ச அதிகரிப்பு என்பது நைஜர் விதைக்கு (Nigerseed) ஒரு குவிண்டாலுக்கு ரூ.755 என முன்மொழியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எள் (Sesamum) ஒரு குவிண்டாலுக்கு ரூ.370, உளுந்து ஒரு குவிண்டாலுக்கு ரூ. 300)என உயர்த்தப்பட்டுள்ளது.
2020-21 சந்தைப் பருவத்துக்கான அனைத்து காரீஃப் பயிர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை:
எண் |
பயிர்கள் |
முன்கணிப்புச் செலவு
|
குறைந்தபட்ச ஆதார விலை (2020-21) |
MSP அதிகரிப்பு |
1 |
நெல் (பொதுரகம்) |
1,245 |
1,868 |
53
|
2 |
நெல் (தரம் ஏ)^ |
- |
1,888 |
53
|
3 |
வெள்ளைச் சோளம்(கலப்பினம்) |
1,746 |
2,620 |
70
|
4 |
வெள்ளைச் சோளம் (மால்தண்டி)^ |
- |
2,640 |
70
|
5 |
கம்பு (Bajra) |
1,175 |
2,150 |
150
|
6 |
கேழ்வரகு (Ragi) |
2,194 |
3,295 |
145
|
7 |
மக்காச்சோளம் (Maize) |
1,213 |
1,850 |
90
|
8 |
துவரம் பருப்பு(ஆர்கார்) |
3,796 |
6,000 |
200
|
9 |
பச்சைப்பயிர் |
4,797 |
7,196 |
146
|
10 |
உளுந்து |
3,660 |
6,000 |
300
|
11 |
மணிலா |
3,515 |
5,275 |
185
|
12 |
சூரியகாந்தி விதை |
3,921 |
5,885 |
235
|
13 |
சோயாபீன்ஸ் (மஞ்சள்) |
2,587 |
3,880 |
170
|
14 |
எள் |
4,570 |
6,855 |
370
|
15 |
நைஜர் விதை |
4,462 |
6,695 |
755
|
16 |
பருத்தி (நடுத்தர இழை) |
3,676 |
5,515 |
260
|
17 |
பருத்தி (நீண்ட இழை)^ |
- |
5,825 |
275
|
ஊரடங்கு காலகட்டமான 24-3-2020 முதல் இன்று வரை பிரதம மந்திரியின் கிஸான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் (PM-KISAN) 8.89 கோடி விவசாயக் குடும்பங்கள் பலன் அடைந்துள்ளன. இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 17,793 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 நோய்த்தொற்று காலகட்டத்தில் நிலவுகின்ற இந்த நெருக்கடியான சூழலில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பிரதம மந்திரி கரீஃப் கல்யாண் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு பருப்புகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 1,07,077.85 மெட்ரிக் டன் பருப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி சலுகை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
நூறு நாள் வேலைத் திட்டம் : கூலியை நேரடியாகச் சென்று வழங்க வேண்டும் - முதல்வர் உத்தரவு!
Share your comments