கூட்டுறவுத் தொடக்க வேளாண் வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்புதமிழக அரசின் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் (பட்ஜெட் தாக்கல்)
தமிழகத்தில் அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட் ஏற்கனவேத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தள்ளுபடி (Discount)
இந்த பட்ஜெட்டில் கூட்டுறவுத் தொடக்க வேளாண் வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நகை அடமானக் கடன் (Jewelry mortgage loan)
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில, மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், குறைந்த வட்டியில் தங்க நகை அடமான கடன்களை வழங்குகின்றன.
ரூ.2.64 லட்சம் கோடி கடன் (Rs 2.64 lakh crore debt)
இந்த வங்கிகள் கடந்த 2011 முதல் 2020 டிசம்பர் மாதம் வரை, 6.60 கோடி பேருக்கு 2.64 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, நகைக்கடன் வழங்கியுள்ளன. சட்டசபை தேர்தலின் போது தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதியாக, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
கூட்டுறவுத்துறை உத்தரவு (Cooperative Order)
இதன்படி, தி.மு.க., ஆட்சி அமைத்துள்ளது. நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை, அக்கட்சி மக்களவைத் தேர்தலின் போதும் அறிவித்திருந்தது. இதனால், கூட்டுறவு நிறுவனங்களில், 2018 - 19, 2019 - 20, 2020 - 2021 நிதியாண்டுகளில் வழங்கிய நகை கடன் விபரங்களை அனுப்பி வைக்குமாறு, கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
ஆவணங்கள் (Documents)
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் பணிபுரியும் அதிகாரிகள், நகைக்கடன் வைத்துள்ளவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆதார் எண் மற்றும் நகைக்கடன் வைத்த போது வழங்கிய அசல் ஆவணங்களை எடுத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official announcement)
இதனால் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழக அரசின் பட்ஜெட்டில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
1500 ஆக்சிஜன் ஆலைகள் விரைவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் அறிவுறுத்தல்!
கொரோனா தொற்று அதிகரிப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை தகவல்!
Share your comments