காய்கறி மற்றும் பழங்களில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருட்களைப் தயாரிப்பது குறித்த 2 நாள் பயிற்சி முகாம் கோவையில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
வேளாண் படிப்பு (Agricultural Studies)
கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்து வருகிறது.
தொழில்முனைவோராக மாற (Become an Entrepreneur)
சான்று பெற்ற பயிர் ரகங்களை அறிமுகப்படுத்துவதுடன், அவற்றில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சாகுபடித் தொழில்நுட்பம், அதிக மகசூலுக்கான சூட்சமம் என விவசாயத்திற்கு இன்றியமையாத விஷயங்களையும் வேளாண் பல்கலைக்கழகம் கற்றுக்கொடுத்து வருகிறது. அதேநேரத்தில் தொழில் முனைவோராக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பணி மகத்தானது.
2 நாள் பயிற்சி முகாம் (2 day training camp)
அந்த வரிசையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 28.12.2021 மற்றும் 29.12.2021 நாட்களில் நடைபெற உள்ளது.
2 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை பின் வரும் தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.
சிறப்பு அம்சங்கள் (Special Features)
-
உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்
-
பலவகை பழ ஜாம்
-
பழரசம்
-
தயார் நிலை பானம்
-
ஊறுகாய்
-
தக்காளி கெட்சப்
-
ஊறுகனி
-
பழப்பார்
கட்டணம் (Fees)
இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ரூ.1770 ரூ.1,500 + 18% GST) பயிற்சி கட்டணத்தை பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 641 003 என்ற பெயரில் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு (For more details)
பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் 641003 என்ற முகவரியிலும், 0422 - 6611268 என்றத் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
Share your comments