திருவாரூர் மாவட்டத்தில், உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் அளிக்கப்படும் என்று வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
100 % மானியம்
இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், செல்வமுருகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உளுந்து சாகுபடி நீடாமங்கலத்தில் வேளாண்மை அறிவியல் நிலையம், தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நீர் நுட்ப மையம் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது.
தற்போது உளுந்து சாகுபடிக்கு 100 சதவீதம் மானியத்துடன் செயல்படுத்த தயாராக உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் விதைகள், உரங்கள் மற்றும் நடமாடும் நீர்தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
5 வட்டார விவசாயிகள்
இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வட்டார விவசாயிகள் பயன் பெறலாம். மன்னார்குடி,நீடாமங்கலம், நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறலாம்.
ஆவணங்கள்
விவசாயிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிட்டா, அடங்கல் ஒரிஜினல், நில வரைபடம், சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க...
Share your comments