1. விவசாய தகவல்கள்

விவசாயிகள் நில அடங்கல் பெறுவதற்கான வழிமுறைகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Ways for farmers to get land content!

மழை போன்ற பேரிடர் காலங்களில், ஏற்படும் பயிர் சேதத்தை ஈடுசெய்ய பயிர் காப்பீடு மிகவும் அவசியமான ஒன்று. அவ்வாறு பயிர் காப்பீடு செய்யவதற்கு அடங்கல் தேவைப்படுகிறது.

நில அடங்கல் (Land content)

விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் , குத்தகை நிலங்களில் சாகுபடி செய்யும் நிலையில் எப்படி அடங்கல் பெறுவது நிலையில் உள்ளனர். எனவே அடங்கல் பெறுவதற்கான எளிமையான வழிமுறைகளைப் பட்டியலிடுகிறோம்.

1. ஆஜர் பட்டாதாரர் காலமாகிவிட்டால் அவரது அனைத்து ஆண், பெண் வாரிசுகள் பெயர்களை சேர்த்து அடங்கல்

2. ஆஜர் பட்டாதாரர் காலமாகிவிட்டால் அவரது அனைத்து ஆண், பெண் வாரிசுகள் நேரடியாக கிராம நிர்வாக அலுவலர் அலுவல கத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும் இனங்களில் மட்டும் அவர்கள் குறிப்பிடும் வாரிசுதாரர் பெயரில் அடங்கல் வழங்கலாம்.

3.கூட்டுப்பட்டாவில் உள்ள ஆஜர் பட்டாதாரர் உயிரோடு இருந்தால் நேரடியாக கிராம நிர்வாக அலவலர் அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும் இனங்களில் மட்டும் அவர்கள் குறிப்பிடும் பட்டாதாரர் பெயரில் அவர்கள் பங்கினை கணக்கீட்டு முழுமையாக, பகுதியாகவோ அடங்கல் சான்று வழங்கலாம்.


4. கூட்டுப்பட்டாவில் உள்ள ஆஜர் பட்டாதாரர்கள் மரணம் அடைந்திருந்தால் அவர்களின் அனைத்து வாரிசுகளும் நேரடியாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும் இனங்களில் மட்டும் அவர்களது பங்கினை கணக்கீட்டு முழுமையாக, பகுதியாகவோ அடங்கல் சான்று வழங்கலாம்.

5. கிரையம் பெற்றுப் பட்டா மாற்றம் செய்யாத இனங்களில் பட்டா மாற்றம் செய்த பின் அடங்கல் நகல் வழங்கினால் போதுமானது.

6.குத்தகை இனங்களில் மட்டும் ஆஜர் பட்டாதாரர்களும், காலமாகி இருப்பின் வாரிசுதாரர்களும், நேரடியாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஆஜராகி அவர்களின் அனைத்து வாரிசுகளும் வாக்குமூலம் அளிக்கும் இனங்களில் மட்டும் அவர்கள் குறிப்பிடும் குத்தகைகாரர் பெயரில் அவர்களது பங்கினை கணக் கீட்டு, முழுமையாக, பகுதியாகவோ அடங்கல் சான்று வழங்கலாம்.

7. மேற்படி, ஆஜர் பட்டாதாரர்களோ, அவரது வாரிசுகளோ நேரடியாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க மறுக்கும் அல்லது தகவம் இனங்களில் அடங்கல் அனுபவ சான்று வழங்க தேவையில்லை.

8. பட்டா மாற்றம் செய்ய இயலாத மற்றும் நீதிமன்ற வழக்குகள் நிலுவையிலுள்ள இனங்களில் அடங்கல் அனுபவ சான்று வழங்கத் தேவையில்லை என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தகவல் 
அக்ரி சு.சந்திரசேகரன்,
வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை
94435 70289.

மேலும் படிக்க...

இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!

Freezer Boxல் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்த அதிசயம்!

English Summary: Ways for farmers to get land content! Published on: 23 November 2021, 09:04 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.