விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
2 ஆண்டுகள் நிறைவு (Completed 2 years)
விவசாயிகளின் கவுரவமான, வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் திட்டம் இந்த வாரம், இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது
இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமரின் கிசான் திட்டம் (PM-Kisan Scheme)
நமது நாட்டு மக்களுக்கு உணவு அளிப்பதற்காக இரவும், பகலும் கடுமையாக உழைக்கும் விவசாயிகளுக்கு கெளரவமான, வளமான வாழ்க்கை வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமரின் கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நமது விவசாயிகளின் உறுதித் தன்மையும், ஆர்வமும் எழுச்சியூட்டுகிறது
வேளாண் துறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக கடந்த 7 ஆண்டுகளில் இந்திய அரசு ஏராளமான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
7 ஆண்டுகள் (7 years)
வேளாண் துறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக கடந்த 7 ஆண்டுகளில் இந்திய அரசு ஏராளமான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மேம்பட்ட பாசனம் முதல் அதிக தொழில் நுட்பம், அதிக கடன், சந்தைகள் முதல் முறையான பயிர்க்காப்பீடு, மண் வளத்தில் கவனம் செலுத்துவது முதல் இடைத் தரகர்களின் நீக்கம் வரை அனைத்து நடவடிக்கைகளும் உள்ளடங்கியுள்ளன.
முயற்சி (Try)
குறைந்தபட்ச ஆதரவு விலையில் வரலாற்று உயர்வை ஏற்படுத்தும் வாய்ப்பை நமது அரசு பெற்றது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
விவசாயிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த ஒரு பார்வையை நமோ செயலியில் நீங்கள் காணலாம்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- தமிழக அரசு அறிவிப்பு!
ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!
Share your comments