- விவசாயிகள் கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இணைய வாய்ப்பு
- சூடுபிடிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம்
- விவசாயிகளுக்கு வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகள்
- ஒரே நாளில் 73சம் பேருக்கு PF ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு முடிவு
- தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி
விவசாயிகள் கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இணைய வாய்ப்பு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். கிராமங்களில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டமானது சிவகாசி வட்டாரத்திற்குட்பட்ட 17 கிராம பஞ்சாயத்துகளில் குறைந்த பட்சம் 8 விவசாயிகளைக் கொண்ட 15 ஏக்கர் உள்ள தரிசு நிலத்தொகுப்புகள் உருவாக்கி, அதில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, தரிசாக உள்ள நிலங்களில் தேசிய வேளாண் வளர்த்தித் திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் முட் புதர்களை அகற்றி, சிறுதானிய சாகுபடியினை ஊக்குவித்து, ஒட்டு மொத்த சாகுபடி பரப்பினை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயன்பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களையோ, வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தினையோ அண்குமாறு சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க.பா.இரவி கேட்டுக்கொண்டார்.
சூடுபிடிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம்
கவுதம் அதானி தலைமையிலான, அதானி குழுமம் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்குபெற இருப்பதாக வந்த செய்தியை அடுத்து, ஏலம் சூடுபிடிக்கும் என சந்தை முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் விலை, வர்த்தகத்தின் இடையே 5 சதம் வரை சரிவைக் கண்டது குறிப்பிடதக்கது.
நாட்டின் 5ஜி அலைக்கற்றையை வாங்கும் போட்டியில், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்கள் களத்தில் இருந்த நிலையில், அதானி குழுமம் தன்னுடைய அறிக்கையில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றுக்கான தனி நெட்வொர்க் வசதிக்காக ஏலம் எடுக்க இருப்பதாகவும்: பொதுமக்களுக்கான தொலைதொடர்பு சேவைக்காக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகள்
காஞ்சிப்புரம், வேளாண் அறிவியல் நிலையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வானிலைத் துறை இணைந்து வழங்கும் வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகளை தெரிவித்துள்ளது.
பொது அறிவிப்பு: லேசான மழை எதிர்பார்க்கப்படுவதினால் விவசாயிகள் பயிர்களுக்கு பாசனம் செய்வதினை தள்ளி வைக்கலாம். மேலும் மழை நாட்களில் பூச்சி, மற்றும் களைக்கொல்லிகள் தெளிப்பதினை தவிர்க்கலாம்,.
குறுஞ்செய்தி: விவசாயிகள் கோழிகளுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில் வெள்ளை கழிச்சல் நோய்க்கான தடுப்பூசியை அளிக்கலாம்.
கால்நடைகளைப் பொறுத்தமட்டில்: விவசாயிகள் கறவை மாடுகளுக்கு அடர் தீவனம்/ பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றை சரிவிகித அளவில் அளித்தல் அவசியமாகும்.
Insecticides India Limited (IIL)-இன் எம்.டி ராஜேஷ் அகர்வால் கிரிஷி ஜாக்ரன் நிறுவனத்திற்கு வருகை
இன்செக்டிசைட்ஸ் இந்தியா லிமிடெட் (IIL)-இன் எம்.டி ராஜேஷ் அகர்வால், புது தில்லியில் உள்ள க்ரிஷி ஜாக்ரன் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர், விவசாயத் துறைக்கான தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் புதிய தலைமுறையின் தொழில்நுட்பங்களுடன் விவசாயியை இணைத்து, முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் அவரது நிறுவனம், October 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும், இன்று வரை அந்நிறுவனம் செயல்படும் முக்கிய கூறுகள் வரை விவரித்தார். சமீபத்தில் அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனை நியமித்தது குறிப்பிடதக்கது. இவ் விழாவில் கிரிஷி ஜாக்ரனின் Chief Editor திரு MC Dominic, திருமதி Shiny Dominic ஆகியோர்களுடன் கிரிஷி ஜாக்ரனின் பத்திரிக்கையாளர்களும் கலந்துக்கொண்டனர்.
ஒரே நாளில் 73 லட்சம் பேருக்கு பிஎப் ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு முடிவு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பிஎப் அமைப்பு தனது சந்தாதாரர்களில் ஓய்வூதியம் பெறும் 73 லட்சம் பேருக்கும் ஒரே நாளில் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தீவரப்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இன்றைய மொத்த சந்தை காய்கறி விலை நிலவரம்! அறிந்திடுங்கள்
4கே ஹைசென்ஸ் டிவி இந்தியாவில் அறிமுகம்
இந்தியாவில் தற்போது பெரிய ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. அதிலும் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் டிவிகள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ஹைசென்ஸ் நிறுவனமும் சிறந்த தொழில்நுட்பங்களை கொண்ட 120-இன்ச் 4கே லேசர் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக முதல் முறையாக ஸ்மார்ட் லேசர் டெக்னாலஜியுடன் இந்த 120- இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதாக தெரிவித்தள்ளது.
இன்றைய வானிலை அறிக்கை
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாயப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, மத்திய கிழக்கு, ஆரபிக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும். ஆந்திரா, மத்திய, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. ஜூலை 14ல் ஆந்திரா கடலோர பகுதிகள் மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். ஜூலை 15,16ம் தேதிகளில் வட ஆந்திரா, மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும்.
மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு அடுத்த 5 நாட்கள் கவனமுடன் இருக்க எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க:
ஜூலை 17 குரூப் 4-க்கான இலவச மாதிரி தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
குறுவை தொகுப்பு திட்டத்திற்கு மானியத்துடன் உரம்| Tamilnadu Weather UPD|
Share your comments