மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை சார்பில், சுதந்திர தின அமிர்த விழாவின் ஒரு பகுதியாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவின் நன்செய் நிலங்கள் என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டது.
இணையதளம்
நன்செய் நிலங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே தளத்தில் அறிந்து கொள்ள இந்த இணையதளத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
நிலம் பற்றிய தகவல்கள்
இந்த இணையதளத்தில் தங்களது நிலம் பற்றிய தகவல்களை இடம்பெற செய்ய விரும்புவோர் அதனை பதிவேற்றம் செய்யவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், தங்களால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் பங்கேற்க விரும்புபவர்களை தொடர்பு கொள்ள முடியும்.
ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்
மேலும் படிக்க
Share your comments