தமிழகத்தில் ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட திறந்த வெளி கிணறு பணி நிறைவு பெற்று சில ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், விவசாயிகள் மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் நிலை உள்ளது.
2016-17 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை சார்பில் நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் தனிநபருக்கு 8 லட்சம் ரூபாய் மானியம், விவசாய குழுக்களுக்கு 12 லட்சம் ரூபாய் மானியத்தில் திறந்த வெளி கிணறுகள் 4 மீ., அகலம், 20 மீ., ஆழத்தில் அமைக்கப்பட்டது.கிணறுகள் அமைக்கப்படும் போது அதிகாரிகள் மின் இணைப்பிற்கு முன்னுரிமை கொடுத்து விவசாயிகளுக்கு வழங்கப்படும், என உறுதி தெரிவித்திருந்தனர்.
500 கிணறுகள் (500 wells)
இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட திறந்த வெளிகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மின் இணைப்பு இல்லை (No electrical connection)
ஆனால் மின் இணைப்பு வழங்காததால் கிணறைப் பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4 ஆண்டுகள் (4 years)
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தெரிவித்ததாவது: விவசாயிகளுக்கு மானியத்தில் கிணறுகள் அமைத்து கொடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க தேவையான மின்சாரம் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக, அரசு மானியத்தில் கிணறு அமைக்கப்பட்டும், அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் விவசாயிகளின் நிலையைக் கருத்தில்கொண்டு, மின்சார இணைப்பு வழங்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
ஊட்டி உருளைக்கிழங்கு - விலை வீழ்ச்சியின் பிடியில்!
ரேஷன் கடைகளில் மத்திய குழு விரைவில் ஆய்வு!
ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments