1. விவசாய தகவல்கள்

PM-Kisan திட்டத்தில் இணைவதற்கானத் தகுதிகள் எவை?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
What are the qualifications to join PM-Kisan scheme?
Credit: Jagran josh

பிரதமரின் கிசான் திட்டத்தில் சேர விரும்புபவரா நீங்கள்? இதில் இணையத் தேவையானத் தகுதிகள், நிபந்தனைகள் உள்ளிட்டத் தகவல்களைத் தெரிந்துகொள்வது நல்லது.

PM-kisan

PMKSN (Prime Minister's Kissan Saman Nithi) அதாவது பாரத பிரதமரின் விவசாயிகள் கொடை நிதி திட்டம் 2010 ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் வேளாண் இடுபொருள்கள் வாங்குவதற்காக வருடத்திற்கு ரூ.6,000 மூன்று தவணையாக வழங்கப்படுகிறது.

இணையதளம்

pmkisan.gov.in என்ற இணையதளத்தில் விவசாயிகள் தாங்களாகவோ அல்லது பொது சேவை மையங்களிலோ பதிவு செய்து கொள்ளலாம்.

உண்மைத்தனமை ஆய்வு

  • கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலோ வேளாண்மை விரிவாக்க மையத் திலோ பதிவு செய்ய இயலாது. கிராம நிர்வாக அலுவலர்கள், விவசாயிகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து வட்டாட்சியருக்கு சமர்ப்பிப்பார்.

  • வட்டாட்சியர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் அதில் 25 சதவீதம் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வர்.

  • பின்னர் வருவாய் கோட்டாட்சியர் தங்கள் கூட்டத்திற்கு உட்பட்ட பயனாளி களை மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) இணைந்து அதில் 10 சதவீதம் எதேச்சை சரிபார்ப்பு செய்து அதனை மாவட்ட வருவாய் அலுவலருக்கு சமர்ப்பிப்பார்.

  • மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் தங்கள் கோட்டத்திற்குஉட்பட்ட பயனாளி களை மற்றும் வேளாண்மை துணை இயக்குனர்(மத்திய திட்டம்) இணைந்து அதில் 10 சதவீதம் சரிபார்ப்புசெய்து அதனை மாவட்ட வருவாய் அலுவலருக்கு சமர்ப்பிப்பார்.

  • மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் தகுதியுள்ள விவசாயிகளை ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியருக்கு ஆய்வறிக்கை சமர்பிப்பார்.

  • மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுக்குப் பின்னர் மாநில இணைப்பு அலுவலர்/வேளாண்மை இயக்குருக்கு சென்னைக்கு சமர்ப்பிக்கப்படும்.

  • அதன் பின்னரே விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும்.

பயன்பெற நிபந்தனைகள் (Terms of use)

  • நில பட்டாதாரராக இருக்க வேண்டும்.

  • அரசு ஊழியராக இருக்க கூடாது.

  • ஓய்வூதியம் வாங்குபவராக இருக்கக்கூடாது.

  • தொகுதி IVம் பணியிலிருந்து ஓய்வு பெற்று பத்தாயிரத்துக்கும் குறைவாக ஓய்வூதியம் வாங்குபவர்கள், இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

  • மருத்துவர், பொறியாளர்கள், Charted Accountants, Lawyers, Artechtures போன்ற தொழில் செய்பவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.

  • மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக் கூடாது.

  • அரசுக்கு வருமான வரி செலுத்துபவர்களாக இருக்கக்கூடாது.

  • ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

  • தவறுதலாக பதிவு செய்யும் விவசாயிகள் நிராகரிக்கப்படுவர்.

  • எனவே தகுதியான விவசாயிகள் மட்டும் பதிவு செய்து பயனடையுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்

சிவராணி

வேளாண்மை உதவி இயக்குனர்

பொன்னமராவதி வட்டாரம்.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் உயிர் உரங்கள்!

3 நாட்களில் 2.37 லட்சம் மரக்கன்றுகள்- நடவு செய்த விவசாயிகள்!

English Summary: What are the qualifications to join PM-Kisan scheme? Published on: 03 October 2021, 11:47 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.